.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் 90.38 % தேர்ச்சி .39 பள்ளிகள் 100% தேர்ச்சி

Unknown | 9:22 PM | 0 comments


பெரம்பலூர், ஜூன் 1:
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 90.38 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. பெரம்பலூர் மாவட்ட அளவில் 121 அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 9,275 மாணவ, மாணவிகள் 26மையங்களில் தேர்வெழுதினர். இதைதொடர்ந்து நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதன்படி தேர்வெழுதிய 9,275 பேரில் 8,383 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.38 ஆகும். கடந்தாண்டு 84.46 சதவீத தேர்ச்சி பெறப்பட்டிருந்தது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 5.92 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட அளவில் செட்டிக்குளம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி செல்வாம்பிகா 496 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் மூன்றாமிடமும் பிடித்தார். இவர் பாடவாரியாக தமிழ் 98, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
 
பெரம்பலூர் ரோவர் மெட்ரிக் பள்ளி மாணவி ரூபிகா 495 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்தார். இவர் பாடவாரியாக தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 98 மதிப்பெண் பெற்றுள்ளார். 
V.களத்தூர் அகரம் செயின்ட் மேரீஸ் உயர்நிலைப்பள்ளி மாணவி ரேவதி 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்தார். இவர் பாடவாரியாக தமிழ் 98 , ஆங்கிலம் 98 , கணிதம் 100 , அறிவியல் 100 , சமூகஅறிவியல் 98 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட அளவில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் அளவில் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாஷினி 493 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
லப்பைக்குடிகாடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பாமிதாபானு, கீழப்பெரம்பலூர் அரசு பள்ளி மாணவி தமிழரசி ஆகியோர் 489 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம் பிடித்தனர். லப்பைக்குடிகாடு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அமீராஹபீப் 487 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றார். மாவட்ட அளவிலும், அரசு பள்ளிகள் அளவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை கலெக்டர் தரேஸ் அஹமது, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் உஷாராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியன், அந்தந்த பள்ளி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர். 

பெரம்பலூர் மாவட்டம் 90.38% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
15வது இடத்திற்கு முன்னேற்றம்
பெரம்பலூர் மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்தாண்டு 84..46 சத வீத தேர்ச்சி பெற்றிருந்தது. அப்போது மாநில அளவில் 19வது இடத்தை பெற்றிருந்தது. இந்தாண்டு 90.38 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதனால் 4 இடம் முன்னேறி 15வது இடத்தை பிடித்தது.
 பெரம்பலூர் மாவட்டத்தில் 39 பள்ளிகள் 100% தேர்ச்சி
பெரம்பலூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 39 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட அளவில் 121 அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 9,275 மாணவ, மாணவிகள் 26 மையங்களில் தேர்வெழுதினர். இதில் 8,383 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 90.38 ஆகும். இதில் தம்பிரான்பட்டி, வேலூர், சத்திரமனை, கவுல்பாளையம், இரூர், ஜமீன் பேரையூர், ஜமீன்ஆத்தூர், கூடலூர், எழுமூர் ஆகிய இடங்களில் உள்ள 9 அரசு பள் ளிகள், லாடபுரம், ஆலம்பாடி ஆகிய இடங்களில் உள்ள 2 ஆதிதிராவிடர் நல உயர் நிலைப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இதேபோல் நெற்குணம் தந்தை ஹேன்ஸ் ரோவர், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன், பனிமலர், மேலமாத்தூர் ராஜவிக்னேஷ், பாடாலூர் அன்னை, அகரம் செயின்ட் மேரீஸ், உடும்பியம் ஈடன் கார்டன், ஒதியம் வான்புகழ் வள்ளுவர், கவுதமபுத்தர் ஆகிய இடங்களில் உள்ள 9 சுயநிதி பள்ளிகள். பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா, ஜோசப், பனிமலர், அன்னை பருவதாம்பாள், ஆருத்ரா, தனலட்சுமி சீனிவாசன், தந்தைஹேன்ஸ் ரோவர், கோல்டன் கேட்ஸ், லப்பைக்குடிகாடு ஹாய் அப்துல்ஷா, திருமாந்துறை விஸ்டம், செட்டிக்குளம் சிறுமலர், கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா, அரும்பாவூர் சாந்தி நிகேதன், திருமாந்துறை ஆண்ட்ரூஸ், பாடாலூர் பிரான்சீஸ், அந்தூர் செயின்ட்.பால், அரும்பாவூர் சுவாமி விவேகானந்தா, நக்கச்சேலம் ஹயகிரீவா ஆகிய இடங்களில் உள்ள 18 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 39 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1