.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டங்கள்-இணையதளத்தில் வெளியீடு

Unknown | 10:21 PM | 0 comments

.
 பிளஸ்1, பிளஸ்2 புதிய பாடத்திட்டம் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 1க்கு 2014&15லும், பிளஸ்2 வகுப்புக்கு 2015&16ம் கல்வியாண் டிலும் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. பாடத்திட்டங்களை மாற்றியமைக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு புதிய பாடத்திட்டங்கள் குறித்து மாவட்ட அளவில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டங் களை நடத்தியது.பின்னர் அதில் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய வரைவு பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த புதிய வரைவு பாடத்திட்டம் http://www.tnschools.gov.in/ என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டம் குறித்த தங்களது கருத்துக்களை மே 30ம் தேதி வரை அனுப்பலாம். தபால் மூலமாகவும், schsec@tn.gov.in ஆகிய ஈமெயில் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Contact Details:
Secretary to Government
School Education Department,

6th Floor,Namakkal Kavingar Malagai,
Fort St.George,Secretariat,
Chennai-600009
Phone:
Office: 044-25672790
Fax:  044-25676388
Email:  schsec@tn.gov.in   

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1