.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது!

Unknown | 2:35 PM | 0 comments



சூரிச், ஜூன் 20-

இந்தியா, அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் உள்ளவர்களின் கறுப்புப் பணம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் 'டெபாசிட்' செய்யப்படுகிறது. இதற்காக அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சூசி ஆகிய வங்கிகள் மிகப் பெரியவை ஆகும்.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 'டெபாசிட்' செய்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள், கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றன. தற்போது ஆட்சிப்பொறுப்பு ஏற்றுள்ள பாரதீய ஜனதா கட்சி, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப்பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.

இதற்காக முதல் கட்டமாக 'சிறப்பு விசாரணைக்குழு' அமைத்துள்ளது.

இந்த நிலையில் சுவிஸ் தேசிய வங்கியின் மத்திய குழு, வங்கி விதிகளுக்கு உட்பட்டு நேற்று ஒரு புள்ளிவிவர பட்டியலை வெளியிட்டது. அதன்படி இந்தியர்களின் 'டெபாசிட்' கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் அதிகரித்து, ரூ.14 ஆயிரம் கோடியை (2 பில்லியன் சுவிஸ் பிராங்க்ஸ்) தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டில் இந்தியர்களின் ‘டெபாசிட்’ அதிகபட்சமாக ரூ.49 ஆயிரம் கோடி என்றும் அதுவே 2010-ம் ஆண்டில் ரூ.28 ஆயிரம் கோடியாக குறைந்தது என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது.

சுவிஸ் வங்கிகளில் அமெரிக் கர்களின் ‘டெபாசிட்’ தொகையும் அதிகரித்துள்ளது. அதாவது 2013-ம் ஆண்டு இறுதி நிலவரப்படி ரூ.27½ லட்சம் கோடியாக (193 சுவிஸ் பிராங்க்ஸ்) உயர்ந்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்புகளால் 2012-ம் ஆண்டில், சுவிஸ் வங்கிகளில் ‘டெபாசிட்’ வெகுவாக குறைந்தது. தற்போதைய நிலவரப்படி இந்தியா, அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் இருந்து செய்யப்படும் ‘டெபாசிட்’ குறைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1