.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

Unknown | 1:31 AM | 0 comments

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''பல்வேறு நோய்களுக்கும் ஏழை எளிய மக்கள் கட்டணமில்லாமல் தரமான சிறப்பு சிகிச்சை பெறும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட கட்டடம், உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்றும், இந்த மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா 19.8.2011 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்கள். அதன்படி, இந்த கட்டடத்தை பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றும் பணிகளுக்காக 32 கோடியே 90 லட்சம் ரூபாயும், உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவக் கருவிகள் மற்றும் தளவாடங்கள் வாங்க 110 கோடியே 24 லட்சம் ரூபாயும் தமிழக அரசு வழங்கியுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 10 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, இதய சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவை புனரமைப்பு சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 9 உயர் சிறப்புப் பிரிவுகளோடு, 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் தரைத்தளத்தில் 2 அறுவை அரங்குகள், முதல் தளத்தில் 2, ஐந்தாவது தளத்தில் 6 மற்றும் ஆறாவது தளத்தில் 4 என மொத்தம் 14 அறுவை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

நோயாளிகள் பயன்பாட்டிற்காக, தரைத் தளத்திலிருந்து 6வது தளம் வரை, சாய் தளப்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 300 கழிப்பறைகள் தவிர, கூடுதலாக 212 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள 17 மின்தூக்கிகள், படுக்கையுடன் கூடிய நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய சிகிச்சைப் பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் உள் நோயாளர் பிரிவு, மயக்க நிலை மீள் பிரிவு, சிறப்புப் பிரிவுகள் மற்றும் பொதுப் பிரிவுகளுக்கு கூடுதல் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மைய ஆய்வகம், ரத்த வங்கி, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், கேத்லேப், மத்திய நுண்கிருமி நீக்குதல் பிரிவு போன்ற உயர் மருத்துவ வசதிகளும், மருத்துவமனையின் தேவைகளுக்காக கூடுதல் மின்சார பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட மருத்துவ வாயுக்கள் வைப்பு அறைகள், மத்திய நுண்கிருமி நீக்குதல் பிரிவு, சலவை நிலையம், சேவை துறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுப் பிரிவுக்கு தேவைப்படும் கட்டில்கள் படுக்கைகள், தீவிர மையத்திற்கான கட்டில்கள் மற்றும் தேவைப்படும் பொருட்களும் வாங்கப்பட்டுள்ளன.

இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்கள்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 258 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு மருத்துவமனை கட்டடங்களையும், 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களையும், புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியின் சேவையையும் தொடங்கி வைத்தார்'' எனக் கூறப்பட்டுள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1