பெற்றோர்களே! போதை, மது, பழக்கங்களுக்கு அடிமையாகாமல் உங்கள் பிள்ளைகளை எப்படி காப்பது?
பிள்ளைகளுக்கு எதிரில் சிகரெட் பிடிப்பது, அவர்களையே
விட்டு கடையில் வாங்கி வரச் சொல் வது, அவர்கள் முன்னி லையில் கூச்சமின்றி மது அருந்துவது… இந்த ப் பழக்கங்கள் எல்லாம் அதிகம் படி க்காத அடித்தட்டு குடும்பங்கள் முத ல் மெத்தப்படித்த மேல்தட்டு வர்க்கம் வரை பரவலாக உண்டு. அது பிள் ளைகளை பாதிக்கும் என்பதைக் கூட உணராத சுய நலப் பெற்றோர்களு க்கு நம்மிடையே பஞ்சமே இல்லை.மது அருந்தும் பழக்கம் இந்தியாவில் சமுதாயத்தின் ஒரு அங்கமாக
பரவி வருகிற
து. அதனால் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றிய உரையாடலும் அதிக ரித்திருக்கிறது. ஆனாலும் மது அருந்துவதைப் பற்றி நாம் கேள்விப்படும் தகவல்க ள் முரணாகவே உள்ளன.
இருபதுகளின் மத்தியில்தான் ஒருவரின் மூளையானது மு ழுமையான வளர்ச்சி அடை கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அப்படிக் கடைசி யாக முழுமை பெறுகிற மூளையின் ப்ரீ ஃப்ரன்ட்டல் கார்ட்
டெக்ஸ்எனும் பகுதி, நாம் ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தித் து, முடிவெடுக்க காரண ர் த்தா. டீன் ஏஜில் பிள்ளைகள் எடுக் கிற விபரீத முடிவுகளின் பின் னணியும், அதைக் கண்டு பெ ற்றோர் அதிர்ந்து போவதன் பின்னணியும் ப்ரீ ஃபரன்ட்டல் கார்ட்டெக்ஸின் முதிர்ச்சி குறை வினால் தான்.
அவர்களது மனநிலையை மா ற்றிக் கொள்ள…
சமூக அளவிலான பயங்களை எதிர்கொள்ள…
நச்சரிப்பு எண்ணங்களைக் குறைக் க…
சமூகப் புறக்கணிப்பைத் தவிர்க்க…
சமூக அளவிலான பயங்களை எதிர்கொள்ள…
சமூகப் புறக்கணிப்பைத் தவிர்க்க…
டீன் ஏஜில் இருக்கும் போது, தம் நண் பர்கள் செய்வதைத் தா மும் செய்ய நினைத்து, அதன் மூலம் அவர்களிட ம் அங்கீகாரத்தைப் பெற நினைப்பார் கள். ஒரு சிலருக்கு போதை மற்றும் மது எடுத்துக்கொள்வதால் மனநிலை யிலும் நடத்தையிலும் ஏற்படுகிற மாற்றங்களைத் தெரிந்து கொள்வதி ல் ஆர்வம். சக நண்பர்களின் கட்டாய த்தின் பேரிலோ அல்லது வேறு சமூக க் காரணங்களுக்காகவோ டீன் ஏஜில் இந்தப் பழக்கம் ஆரம் பிக்கும். பிறகு நண்பர்களுடனான அளவளாவல்களின் போ தும் தொடரும். அளவளாவும் காரணத்துக்கு மட்டும் குடிக்கு ம் டீன் ஏஜ் பிள்ளைகள் கொஞ்ச மாகவே குடிப்பார்கள். மேலும் அளவோடு குடிப்பார்கள்.
பொதுவாக நம் மூளையில் எண் டார்பின்ஸ் மற்றும் இதர இன்ப ரசாயனங்கள், இன்பம் தரு ம் நடவடிக்கையில் ஈடுபடு வதன்மூலம் சுரக்கும். உடற்பயிற்சியில் ஈடுபடும்பொழுதும் இந்த ரசாயனங்கள் சுரக்கும். ஆனால், சிலரின் மூளையில் இன்ப ரசாயனங்கள் குறை வாக சுரப்பதால் அவர்கள் சாதா ரணமாக வாழ்க்கை யில் இன்பத்தை அனுபவி க்க மாட்டார் கள். இது ஒரு மரபணு நோய் என்றே கூற லாம். இத்தகைய மூளை வகை வடிவம் கொண்ட பிள்ளைகள் அளவளாவல் கூட்டத்தின் பேரில் குடிக்க ஆரம்பித்து இன்பத்தைப் பெறும் முயற்சியில் அளவுக்கு மீறி குடிக்கத் தொடங்குவார்கள். ஆனால், மது அருந்துவதன் மூ லம் போதைதான் உண்டாகு மே தவிர இன்ப ரசாயனங்கள் சுரக்காது. இன்ப ரசாயனங்க ள் குறைவாக சுரக்கும் மூளை யைக் கொண்டவர்கள் இன்ப த்தை உண்டாக்க மது மற்றும் போதைப் பொருளை உபயோ கித்து, ஒருகட்டத்தில் போதை ப் பொருள்களுக்கு அடிமை யாகிவிடுவார்கள். குடிப்பழக் கத்தைப் பற்றி பெற்றோர் என் னதான் போதித்தாலுமே, பிறப்பிலிருந்தே உடனிருக்கும் சில ஜீன்களை மாற்றவா முடியும்? குடிப்பழக்கத்துக்கும் மரபணுக்களுக்கும் தொடர்புண்டு. சில நபர்க ளுக்கு இயல்பிலேயே குடியின் மீது ஒரு வெறுப்பு இருக்கும். அதுவே அவர் களை குடிப்பழக்கத்திலிருந்து விலகி இருக்கச் செய்யும்.
ஒரு சிலருக்கு ஆல்கஹால் எதிர்ப்புத் திறன் மிக அதிகமாக இருக்கும். ஆல் கஹாலின் விளைவுகளை முழுமை யாக உணர, மற்றவர்களை விட அதிக ம் குடிக்கத் தயங்க மாட்டார்கள். சிலர் அபாயத்தை ரசிக்கும் ஜீன்களை கொ ண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் போதையின் அபாய த்தை ரசி ப்பதற்காகவே குடிப்பார்கள். சிலர் எழுச்சியைத் த விர்க்கும் இயல்பு குறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்க ளால் மது அருந்தும் சூழ்நிலையின் எழுச்சியை தவிர்க்க முடியாது. இப்படி மனநிலையை மாற்றிக் கொள்ள குடிப்ப வர்கள் அள வுக்கதிகமாகக் குடிப்பார்கள். இவர்கள் தனிப்ப
ட்ட மற்றும் குடும்ப ரீதியான மற்றும் சமுதாய அளவிலான காரணங்க ளை முன்னிட்டு குடிப்பார்கள்.
தனிப்பட்ட பிரச்னைகள் என்று பார்த் தால், மிகக்குறைந்த தன்னம்பிக்கை , மதிப்பெண்கள் குறைதல், படிப்பதி லும், பழகுவதிலும் திறமையின்மை போன்றவை. குடும்பத்தில் யாருக் கேனும் குடி மற்றும் போதைப் பழக் கம் இருப்பது, அப்பா, அம்மாவைப் பற்றிய தவறான இமேஜ், பெற்றோ ருக்கும் பிள் ளைகளுக்குமான பேச் சு ப் பரிமாற்றக் குறைபாடு, வீட்டில் எப்போதும் தொடர்கிற சண்டைகள் போன்றவை குடும்ப அளவிலான காரணங்கள்.
பெற்றோரோ, தன்னைச் சுற்றியிருக்கிற பெரியவர்களோ
என்ன செய்கிறார்கள் என்ப தைக் கவனித்து, அதைத் தாமு ம் செய்ய நினைக்கிற டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு பெற்றோர் அல்லது பெரியவர்களின் குடி, போதை மருந்துப் பழக்கமும் எளிதில் ஒட்டிக் கொள்கிறது. தம்மைப் பெரியவர்களாகக் கா ட்டிக் கொள்ள அல்லது பெரிய வர்களை எதிர்க்கும் சக்தி யைப் பெறும் அஸ்திரமாக இந்தப் பழக்கங்களைப் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.
போதை, மது தொடர்பான சூழலே தெரியாத பிள்ளைகளுக்
கு, அவற்றை உபயோ கிக்கிற வாய்ப்புகளும் குறைவு. அதன் மூலம், அவற்றால் உண்டாகும் அடிமைத்தனம் உள்ளி ட்ட பல பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கிறார் கள். எனவேதான் சிறு வயதுப் பிள்ளைகளை இவற்றின் பரிச்சயமின்றி வள ர்க்க வேண்டியது அவசியம். ஆ னால், அதே சமயத்தில், இவ் வாறு மதுவிலிருந்து விலகி யிருந்தால் மட்டும் அவர்கள் போதைக்கு அடிமையாக மாட் டார்கள் என்று கூற முடி யாது.
இத்தகைய பெற்றோரால் வளர்க்கப்படுகிற பிள்ளைகளுக் கு, நண்பர்கள் அல்லது சக பிள்ளைகளின் பழக்கங்களின் தாக்கத்தால் பாதிக்கப்படுவது குறைவாகவே இருக்கும்.
மேல்தட்டுக் குடும்பங்கள் சில வற்றில், டீன் ஏஜ் பிள்ளைக ளை வீட்டுக்குள் மட்டும் குடிக்க அனுமதிக்கிற பெற்றோரும் இருக்கிறார்கள். அப்படி அனும திப்பதன் மூலம், அவர்களது குடிப்பழக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என நம்புகிறார்கள். அப்படி பெற்றோரின் அனுமதியின் பே ரில் வீட்டுக்குள்ளேயே குடிக்க ஆரம்பிக்கிற பிள்ளைகள்,
அடுத்தடுத்து வெளியில் குடிக் கவும், அதிலும் அதிகம் குடிக் கவும் ஆரம்பிப்பார்கள். அதே நேரம் இளவயதில் குடிப்பது கூடாது எனக் கட்டுப்படுத்தப்ப டுகிற பிள்ளைகள், குடிப்பழக் கத்துக்கு அறிமுகமானாலு மே, அளவோடு குடிப்பார்கள் என்று கூற முடியாது.
அதிக செல்லம் கொடுத்து தடை களின்றி வளர்க்கப்படும், அளவுக்குமீறி குடிக்கும் பெற்றோருடன் குடிக்கத் தொடங் கும் டீன் ஏஜ் பிள்ளைகள்
அளவுக்கு மீறி குடிக்க வாய்ப் புகள் அதிகம். குடிப்பழக்கம் குறித்த குடும்ப விதிமுறைக ளும், பெற்றோரின் குடிப்பழ க்கமும் இந்த விஷயத்தில் மி க முக்கியம். அளவுக்கு மீறி மது அருந்தும் பெற்றோர் குடிக்கக்கூடாது என்று போதிப்பது பொருந்தாது. மாறாக அவர்கள் அளவுக்கு மீறி குடிப்பதனா ல் உண்டாகும் விளைவுகளைப் பற்றி வலியுறுத்தலாம். குடி வெறும் 19 சதவிகித டீன் ஏஜ் பிள்ளைகள்தான், பெற்றோர் விரும்பும் இசையைக் கேட்கவும், 26 சதவிகிதப் பிள்ளைகள்
தான், பெற்றோர் சொல்கிற படி உடையணியவும் சம்ம திக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஆனால், 80 சதவிகிதப் பிள்ளைகள், குடி ப்பழக்கத்தைப் பற்றி பெற் றோர் சொல் வதைக் கேட்டு நடக்கவே விரும்புகிறார்கள் என்று அந்த ஆராய்ச்சி சொல்கிறது. பெற்றோரின் வளர்ப்பு முறை என்பதை மீறி, குடித்தது தெரிந்தால் பெற்றோர் வருத் தப்படு வார்கள் என நினைக்கிற பிள்ளைகள் அதைச் செய் வதில்லை. பெற்றோருக்கு இதில் தலையிட உரிமையில் லை என நினைக்கிற பிள்ளைகள் குடிபோதைக்கு அடிமை
யாக நான் கு மடங்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.
இளவயதுக் குடிப்பழக்கம் குறித்த பெற்றோரின் கருத்து கள் தெரிந்த பிள்ளைகள், பெ ற்றோரின் எதிர்பார்ப்பை மீறு வதில்லை. இதுவரை உங் கள் வீட்டில் குடிப்பழக்கம் கு றித்த விதிமுறைகள் இல்லாமலிருந்தால், உடனடியாக விதி களை வலியுறுத்துங்கள். விரைவாகவும் அடிக்கடியும் பிள் ளைகளி டம் இதைப் பற்றிப் பேச வேண்டும். மேலும் தாம்
சொல்வதை பெற்றோர் முதலி ல் கடைப்பிடிக்க வேண்டும். பிள் ளைகளின் நண்பர்களின் பெற் றோர்களுடன் கலந்து பேசி, எல் லா பிள்ளைகளும் எங்கே கூடு கிறார்கள், என்ன செய்கிறா ர்கள் என்பதைக் கண்காணியுங் கள். இளவயதில் இத்தகைய தவறான பழக்கங்களுக்குள் செல்வதைப் பற்றிய விழிப்புண ர்வை ஏற்படுத்தும் வகையில் எங்கெல்லாம் வாய்ப்புண் டோ, அங்கெல்லாம் பேசுங்கள்.
குடியைப் பற்றிய டீன் ஏஜ் பிள்ளைகளின் சிந்தனைகளை, அதாவது, குடிப்பது சரியா, தவறா… எப்படிக் குடிக்கலாம்,
அது உண்டாக்கும் பிரச் னைகள் என்ன என்கிற விஷயங்கள் குறித்த முடிவுகளுக்கு பெற் றோரின் இந்த அணுகு முறை பிள்ளைகளிடம் நல்ல விதத்தில் செயல் படும்.
பாசிட்டிவான நடத்தையுடன், நல்ல தகவல் பரிமாற்றத்து டன், சரியான விதிமுறைகளை வகுத்து, கண்காணிப்புடன்
வளர்க்கிற பெற்றோரின் பிள் ளைகள், மதுப்பழக் கத்தைத் தவிர்த்து விட வாய்ப்புகள் அதி கம். மதுப்பழக்கம் இல்லாத நட் பு வட்டமும் அவர்களுக்கு உதவும்.
இந்தவிஷயத்தில் பள்ளிக் கூட ங்களுக்கும் பொறுப்புண்டு. பள்ளி நேரம் முடிந்த பிறகு பிள்ளைகளை விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும். மூளையில் இன்ப ரசாயனங்க ளைச் சுரக்க வைக்கும் விளையாட்டு மற்றும் இதர நடவடிக்
கைகளில் ஈடுபடுத்த வேண்டு ம். ஆசிரியர்களும், விளையா ட்டு மற்றும் பிற துறை பயிற்சி யாளர்களும் பிள்ளைகளுக்கு சிறந்த முன்மாதிரியாளர்களா க இருக்க வேண்டும்.
தவிர…
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான உறவு முறை சுமுகமானதாக, பாசிட்டிவாக இருக் க வேண்டும்.
பிள்ளைகள் சொல்கிற விஷயங்க ளுக்கு காது கொடுக்க வேண்டும்.
பிள்ளைகளின் பிரச்னைகளைத் தீர் ப்பதில் பெற்றோரின் ஆதரவும் உத வியும் துணையிருக்க வேண்டும்.
ஒழுக்கமும் குடும்ப விதிமுறைகளு ம் வலியுறுத்தப்பட வேண்டும்.
பிள்ளைகளின் நடவடிக்கைகள் தவ றாமல் கண்காணிக்கப் பட வேண்டும்.
- டீன் ஏஜில் உணவுப் பழக் கம்… எது சரி… எது தவறு ? எப்படி சரி செய்வது?
Category: கட்டுரை

0 comments