யார் பிரதமராக வரவேண்டும்? – கருத்துக் கணிப்பில் அர்விந்த் கெஜ்ரிவால் முதலிடம்!
முக்கிய பத்திரிக்கை நிறுவனம் ஒன்று நாட்டின் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனா மற்றும் அகமதாபாத் ஆகியவற்றில், யார் பிரதமராக வரவேண்டும் என கருத்துக்கணிப்பு நடத்தியது.
சென்னையில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் கெஜ்ரிவாலுக்கு முதலிடமும், மோடிக்கு இரண்டாமிடமும் கிடைத்துள்ளது. மோடியின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் 31 சதவிகிதம் பேர் கெஜ்ரிவால் பிரதமராவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அப்பத்திரிக்கை கூறியுள்ளது.
Category: மாநில செய்தி


0 comments