ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்!-கலெக்டர் தரேஸ்அஹமது வேண்டுக்கோள்!
பெரம்பலூர், ஜன. 10:
தேசிய அடையாள அட்டைக் கான இரண்டாம் கட்ட புகைப்படம் எடுக்கும்பணி நடைபெறுவதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தரேஸ்அஹமது கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டைக்கான (ஆதார்) பதிவு செய்யும் முதல்கட்ட முகாம் முடிவுற்றதையடுத்து இரண்டாம் கட்டமாக பெரம்பலூர், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2010 தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு, தேசிய அடையாளஅட்டை பெறுவதற்கான புகைப்படம், கைரேகை, விழித்திரை பதிவு செய்திட ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள பழைய நகராட்சி அலுவலகத்திலும், பெரம்பலூர், குரும்பலூர் மற்றும் வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூர், வெங்கலம் மற்றும் வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்கள் தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் தகவல்களை பதிந்து கொள்ள வேண்டும்.
இந்த முகாமிற்கு பதிவுசெய்ய வரும் மக்கள் அனைவரும் 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ஒப்புதல்சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று மற்றும் அசல் குடும்பஅட்டை, வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்ய வரவேண்டும்.
2011ம்ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது கிராமத்தில் குடியிருப்பு இல்லாதவர்கள், கணக்கெடுப்பின் போது விடுபட்டவர் கள் மற்றும் புதியதாக குடியேறியவர்கள், புதியதாக தேசிய மக்கள்தொகை கணக்கெ டுப்பு படிவத்தில் விவரங்களை பூர்த்திசெய்து தாக்கல் செய்யவேண்டும். மேற்படி புதிய கணக்கெடுப்புப் படிவத்தினை தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments