.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

மதம் மாறிக்கொள்வதும் ஒரு சட்ட உரிமைதான்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு.!

Unknown | 8:39 PM | 0 comments

..

தூத்துக்குடியை சேர்ந்த கீதா, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், நாங்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். என் 19 வயது மகள் பவித்ராவை தபிவீத், ஐக்காரியா ஆகியோர் கடத்தினர். மகளை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றியுள்ளனர். மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்தி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் தமிழ்வாணன், ரவி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, பவித்ராவை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரிடம் நீதிபதிகள் விசாரித்தனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பவித்ராவிடம் விசாரித்த போது, தன்னை யாரும் சட்டவிரோத காவலில் வைத்திருக்கவில்லை. தானே விரும்பி இஸ்லாம் மதத்திற்கு மாறினேன். தபிவீத் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன். தான் மதம்மாறி, தபிவீத்தை திருமணம் செய்து கொண்டது தாய்க்கும், தந்தை குமாருக்கும் தெரியும் என்றும் கூறியுள்ளார்.

பவித்ரா மாயமானது குறித்து கீதா, கேரள மாநிலம் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் 5ம் தேதி புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பவித்ரா, தபிவீத்தை திருமணம் செய்து கொண்ட விபரம் தெரிய வந்ததும் வழக்கை போலீசார் முடித்துள்ளனர்.

பவித்ரா, ஜக்காரியா என்பவரின் இஸ்லாமிய மையத்தில் இருந்த போது அவரை கீதா சந்தித்ததாகவும், தன் மகளை அவரது விருப்பத்திற்கு எதிராக இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்யக்கூடாது என ஐக்காரியாவிடம் கேட்டுக்கொண்டதாக கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பவித்ரா, தானாக விரும்பி இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும், யாருடைய கட்டாயத்தின் பேரிலும் மதம்மாறவில்லை என்றும் கூறினர். பவித்ரா மேஜர் பெண். அவருக்கு பிடித்த நபரை திருமணம் செய்ய அடிப்படை உரிமை உண்டு. மதமாற்றமும் ஒரு சட்ட உரிமை தான். அவரது விருப்பத்திற்கு எதிராக மதமாற்றம் நடைபெறவில்லை. தான் மதம் மாறியதும், திருமணம் செய்ததும் தானாக விரும்பி செய்தது, யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று பவித்ரா கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் கீதாவின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1