இடஒதுக்கீடு:சிறுபான்மை கல்விநிறுவனங்களுக்கு பொருந்தாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை,ஜன.8-தனியார் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர்மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு விதிகள் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 30 (1)-ன் படிசிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது எனசென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்வதுதொடர்பாக அரசு பிறப்பித்தஆணையை ரத்து செய்யக்கோரி லயோலா கல்லூரி உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தமனுவிவரம்: எங்களது கல்வி நிறுவனத்தில் மாணவர்கள்சேர்க்கையின் போது, மதத்தைஅடிப்படையாக் கொண்டு,யாருக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை. இந்த நிலையில் கடந்த2012-ஆம் ஆண்டு உயர்கல்வித் துறை ஒரு அரசாணைபிறப்பித்தது. அதில், அரசு, அரசுஉதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்வி நிறுவனங்கள்2012- 13-ஆம் ஆண்டுக்கானசேர்க்கையில் இடஒதுக்கீடுதொடர்பான வழிமுறைகளைபின்பற்றுவது தொடர்பாக ஒருஉத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே சேர்க்கையின் போது இடஒதுக்கீடு தொடர்பாக அரசுபிறப்பித்த வழிமுறை தொடர்பான உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதிராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஐசக்மோகன்லால் ஆஜராகி, லயோலாகல்லூரி அரசு உதவி பெறும்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடும், மீதம் உள்ள 50 சதவீத இடத்தில் 40 சதவீதம் கிறிஸ்தவர்களுக்கும், மீதம் 10 சதவீதம்கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும் தகுதி அடிப்படையில்ஒதுக்கீடு செய்கிறது. எனவேஅரசு உத்தரவை ரத்து செய்யவண்டும் என வாதாடினார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு 2012-ஆம்ஆண்டு பிறப்பித்த வழிமுறைகள், இதர அனைத்து சட்டங்களையும் மீற முடியாது. குறிப்பாக,தமிழ்நாடு சட்டம் 2006-ஐ மீறமுடியாது.
மேலும், கடந்த 2012-ஆம்ஆண்டு அரசு ஆணையில்கூறப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில்பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு விதிகள் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 30 (1)-ன் படி சிறுபான்மைகல்வி நிறுவனங்களுக்குபொருந்தாது.
மேலும், லயோலா கல்லூரியில் அரசு உதவி பெறும் படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடுவழங்கப்படுகிறது. மீதம் உள்ள50 சதவீதத்தில் 40 சதவீதம்கிறிஸ்தவர்களுக்கும், மீதம்உள்ள 10 சதவீதத்தில் தகுதிஉள்ள அனைவருக்கும் இடம்அளிப்பதாக மனுதாரர் வழக்குரைஞர் தெரிவித்தார். இந்தச்சூழ்நிலை மற்றும் உண்மையின்அடிப்படையில் இந்த மனுவை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. எனவே மனு ஏற்கப்பட்டு,2012-ஆம் ஆண்டு பிறப்பித்தஅரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: மாநில செய்தி


0 comments