.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் 10–ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Unknown | 8:10 PM | 0 comments

பெரம்பலூர், –
பெரம்பலூரில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி வருகிற 10–ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதுகுறித்து கலெக்டர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பெரம்பலூர் மற்றும் குன்னம்ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணி கடந்த 31.10.2013 அன்று நிறைவு பெற்றுள்ளது.
மேலும், மேற்கண்ட 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக் காளர் பட்டியல் வருகிற 10–ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தரேஸ் அஹமது முன்னிலையில் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பெரம்பலூர் உதவி கலெக்டர் வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1