.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதார அலுவலர்களுக்கு வாக்கி - டாக்கி தரேஸ் அஹமது வழங்கினார்!

Unknown | 8:48 PM | 0 comments

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வசதியாக சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு வாக்கி - டாக்கி கருவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து, சுகாதார பணிகள் துணை இயக்குநர், 4 வட்டங்களிலும் உள்ள வட்டார மருத்துவ அலுவலர்கள், பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனை, துங்கபுரம், அத்தியூர், பூலாம்பாடி மற்றும் பசும்பலூர் ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 10 வாக்கி- டாக்கி கருவிகளை வழங்கி ஆட்சியர் தரேஸ் அஹமது பேசியது:
வருவாய்த் துறை மற்றும் வளர்ச்சித் துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த இந்தக்  கருவி, தற்போது மருத்துவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், வருவாய், வளர்ச்சி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளும் இணைப்பில் இருக்கும். இந்த கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து முறையான பயிற்சி விரைவில் வழங்கப்படும். பொதுமக்களுக்குத் தேவையான சேவையை செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள இந்த வசதியை மருத்துவத் துறையினர் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர் சார் ஆட்சியர் ப. மதுசூதனன் ரெட்டி, விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலர் மருத்துவர் அரவிந்த், வட்டாட்சியர் ரவி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1