.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !

Unknown | 9:41 PM | 0 comments

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? சென்னையில் சிறப்புற நடைபெற்ற 

ஆவணப்பட திரையீடு & புத்தக வெளியிட்டு நிகழ்ச்சி !

 


இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையம் சார்பில் பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? எனும் ஆவணப்படதிரையீட்டு நிகழ்சி நேற்று 24.3.13 மாலை வடபழனி RKV ஸ்டுடியோ வில் நடை பெற்றது ! சுமார் 90 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படத்தில் பெரியார் குறித்த இதுவரை வெளிவராத பல அறிய தகவல்கள் வெளி வந்துள்ளன. திரையீட்டு நிகழ்சியில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் , திரைத் துறையினர் , பெரியார் இயக்க தோழர்கள், தலித் இயக்க தோழர்கள் , இஸ்லாமிய இயக்க தலைவர்கள், சமுதாய ஆர்வலர்கள் அனைவரும் IDRC இன் இந்த முயற்சியை வியந்து பாராட்டினர்.

புரபசனல் கூரியர் அஹமது மீரான் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செங்கிஸ் கான் வரவேற்புரை ஆற்ற , இயக்குனர் சிபிச்சந்தர் ,இயக்குனர் அமீர் , பேராசிரியர். செல்வராஜ் , ஆகியோர் வாழ்த்துரை வழங்க இறுதியாக பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்! பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? எனும் ஆவணம் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது !

சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்!
பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் !


இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய IDRC துணைத் தலைவர் செங்கிஸ் கான் 'இஸ்லாத்திற்கு ஆதரவாக இவ்வளவு பேசிய பெரியாரை இஸ்லாமிய சமுதாயம் சரியான முறையில் அணுகவில்லை பயன் படுத்தவில்லை எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடாக பெரியார்தாசன் அப்துல்லாஹ் அவர்களையாவது சரியான தளத்திலே பயன்படுத்த வேண்டும் எனும் தாவா நோக்கில் எடுக்கப்பட்டது தான் இந்த ஆவணப்பட முயற்சி ! ஏன் எனில் இங்கே பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத அமைப்போ தலைவர்களோ இல்லை எனும் போது 50 ஆண்டுள் அவர் இஸ்லாத்தை பற்றி சொன்ன கருத்துக்கள் எளிதில் மக்களை சென்றடையும் ! எனவே இந்த ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ தமிழகத்தின் அனைத்து பெரு நகரங்களிலும் மேலும் வெளிநாடுகளிலும் வெளியிட உங்களின் ஒத்துழைப்பை நாடுகிறோம் ! என்று கூறினார்.

உயர்ந்த வாசனைத் திரவியங்கள் எல்லாம் பூசுகின்றேன்
அந்த மூத்திர நாத்தம் மட்டும் இன்னும் போகவில்லை! -சிபிசந்தர்


பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? ஆவனப்படத்தின் இயக்குனர் சிபிச்சந்தர் திரையீட்டு நிகழ்சியில் பேசும் பொது ' பெரியார் பிறந்த ஈரோட்டில் பிறந்த நான் எனது பள்ளிக் கூடத்தில் தரையில் அமர்ந்திருக்க மேல்சாதி மாணவன் இருக்கையில் அமர்ந்து என்னை காலால் மிதித்துக் கொண்டே இருப்பான் நான் அழுகையோடு என் தாத்தாவிடத்தில் சொன்ன பொது அவர்கள் உயரந்தசாதியினர் அப்படித்தான் என்றார். நான் அந்த மாணவனின் காலைக் பிளேடால் கிழித்து விட பள்ளி நிர்வாகம் என்னை அடித்து உதைத்து என் மேல் அந்த மேல்சாதி மாணவனை மூத்திரம் பெய்யச் செய்தனர் !
இன்று நான் ஒரு திரைப்பட இயக்குனகி உலகமெல்லாம் சுற்றி வந்து உயர்ந்த வாசனைத் திரவியங்கள் எல்லாம் பூசுகின்றேன் அந்த மூத்திர நாத்தம் மட்டும் இன்னும் போகவில்லை! எனவே இந்த ஆவணப்படத்தின் மையக் கருத்தான தீண்டாமை ஒழிய தீர்வு இஸ்லாமே எனும் பெரியாரின் கருத்தை உளப் பூர்வமாக உணர்ந்ததால் தான் இதில் நான் உணர்வுப்பூர்வமாக பணியாற்றினேன் ' என்றார் அவரது இந்த உரை அனைவரையும் ஈர்த்தது !

இந்த மேடையில் நிற்க வெட்கப் படுகிறேன் !

பெரியார் ஆவணப்பட விழாவில் அமீர் !பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர் அவர்கள் ஊடகத்தை இஸ்லாத்திற்காக பயன் படுத்துவதற்கு நமக்கு ஒரு நூற்றாண்டு ஆகி இருக்கிறது ! இதே தியேட்டரில் எத்தனையோ முறை கை தட்டல் விசில் ஆகியவற்றைக் கேட்டுள்ளேன் ! அல்லாஹு அக்பர் எனும் குரல் ஒலித்த போது சிலிர்த்தேன் ! ஆடல் பாடல் இல்லாத , நட்சதிரப்பட்டாளம் இல்லாத ஒரு ஆவணப்படத்திற்கு கை தட்டல் வாங்க முடியும் என்பதை இன்றைக்கு பார்த்த போது உண்மையிலேயே இதை இயக்கிய சிபிச்சந்தரை பாராட்டுகிறேன்.ஏன் எனில் நான் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்துள்ளார் ! இந்தக் படக் குழுவினரோடு இந்த மேடையில் நிற்க வெட்கப்படுகிறேன்! ஏன் என்றால் 10 ஆண்டுக்கும் மேலாக திரைத் துறையில் இருந்தும் நாங்கள் செய்யாத வேலையை இவர்கள் செய்துள்ளார்கள் ! இந்த ஆவணப்படத்தின் போக்கை திசை மாற்றியவன் என்று சொன்னார்கள் ! உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை 'இந்த இடத்திற்கு இப்படிப் போகக் கூடாது இப்படிப் போகணும்' என்று அட்ரஸ் சொன்னத்ற்கே இந்த மேடையில் இவ்வளவு கண்ணியம் என்றால் உண்மையிலேயே ஒழுங்காக வேலை செய்திருந்தால் இந்நேரம் இது போன்று இஸ்லாத்தை சொல்லும் ஆவணப்படங்கள் எத்தனையோ வந்திருக்கும் என ஆதங்கப்பட்டார் !

நான் மட்டும் வருவதால் எந்த நன்மையையும் இல்லை 

ஒட்டு மொத்த என் கிராமமும் வர வேண்டும் !

பெரியார் ஆவணப்படத்தில் ' நாங்க தச்ச செருப்பை அவங்க போடுறாங்க எங்களப் போடக் கூடாதுன்னு சொல்ராங்களே! எங்க எருமை மாடு ஊர்க்குளத்துல குளிக்குது நாங்க குளிக்கக் கூடாது என்கிறார்களே' என உணர்வோடு உயிரோட்டமாக நடித்த பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அந்த ஆவணப்பட திரையீட்டு நிகழ்சியில் பேசும் போது 'பெரம்பலூர் மாவட்டத்தின் பெயர் தெரியாத கிராமத்தில் இருந்த என்னை இந்த ஆவணப்படம் என்னை பெயர் அறிய செய்தது. அய்யாவின் கை பிடித்து அறிவு சாலை சென்றேன் ! இன்றைக்கும் அய்யா பெரியார் தாசனின் [அப்துல்லாஹ்வின் ] கை பிடித்து இந்த மேடை ஏறி வந்துள்ளேன் ! இன்றைக்கு நான் இந்த ஆவணப்படத்தில் நடித்ததன் மூலம் பெரியார் பரிந்துரைத்த இஸ்லாத்தை உள்வாங்கி இருக்கிறேன்! ஆனால் நான் மட்டும் வருவதால் எந்த நன்மையையும் இல்லை! எனது ஒட்டு மொத்த கிராமத்துக்கும் இந்த கருத்துக்களை எடுத்து சொல்லி பெரியார் சொன்ன இடத்துக்கு இஸ்லாத்துக்கு வர வேண்டும் அதுவே என் விருப்பம் ! ஏன் எனில் இது என் போன்ற தனி மனிதனின் பிரச்னை இல்லை இது சமுகம் சார்ந்த பிரச்னை என்றார். அல்ஹம்து லில்லாஹ்! இறைவன் அவரின் உள்ளத்தை இஸ்லாத்தின் பால் திருப்பட்டும்!
  
இது பெரியார் இஸ்லாத்தைப் பற்றி சொன்னதில் ஒரு பகுதிதான்! 

இது போல 3 படம் எடுக்கும் அளவுக்கு இன்னும் உள்ளது ! -Dr. அப்துல்லாஹ்!

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? ஆவணப் பட திரையீட்டு நிகழ்ச்சியில் நிறைவுரை நிகழ்த்திய டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள்இந்த ஆவணப்படத்தை 2 ஆண்டுகளாக் பெரும் முயற்சி எடுத்து உங்கள் முன் திரையிட்டுள்ளோம் ! இதில் ஏதாவது மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் 'பெரியார் இப்படி சொல்லவில்லை இப்படி சொல்லியிருக்கிறார்' என ஆதாரத்துடன் வாருங்கள்! ஏன் எனில் இதில் என்னுடைய சுய கருத்துக்கள் எதுவும் இல்லை முழுக்க முழுக்க பெரியாரின் கருத்துகள்தான்! அவர் உயிரோடு இருக்கும் போதே அய்யா ஆனைமுத்து அவர்களால் அவரிடமே கை எழுத்துப் பெற்று வெளிவந்த பெரியார் ஈ .வே.ரா சிந்தனைகள் எனும் தொகுப்பில் இருந்தும்,அவரது குரல் வழி ஆதாரங்களோடும் தான் இந்தக் கருத்துக்களை திரட்டியுள்ளோம். ஆனால் இது இஸ்லாத்தை பற்றி பெரியார் சொன்னதில் ஒரு பகுதிதான். இது போன்று இன்னும் 3 படம் எடுக்கும் அளவுக்கு இன்னும் செய்திகள் உள்ளது!

பெரியாரின் இஸ்லாம் குறித்த கருத்துக்களை வெளியிட எதிர்ப்புகள் வரலாம் ! ஏன் எனில் இந்த திரையீட்டு நிகழ்சி முதலில் ரஷ்யன் கலாச்சார மையத்தில் தான் வெளியிடுவதாக முன்பணம் எல்லாம் செலுத்தி இருந்தோம் திடீர் என 'படத்தை பார்த்து விட்ட்டுத் தான் அனுமதிப்போம் ' எனக் கூறினார்கள்! படத்தை போட்டுக் காட்டியபின்னர் அனுமதி மறுத்தனர். பெரியார் தன வாழ்க்கையில் 6 ஆண்டுகள் சொன்ன கடவுள் மறுப்புக் கொள்கையை தூக்கிப் பிடிக்கும் கம்யுனிஸ்டுகள் அவர் இஸ்லாத்தை பற்றி 50 ஆண்டுகள் சொன்னதை மறுப்பதேன்? இதனால் பெரியார் இவர்களைப் பார்த்து இந்த கூமுட்டைகளுக்கு என்ன தெரியும் எனக் கேட்டார்! என்று காட்டமாக விமர்சித்தார்! ரஷ்யன் கலாச்சார மையத்தில் தடுத்தால் முடங்கி விடுமா? இறைவன் நாடினால் இஸ்லாமிய சமுதாயம் ஒத்துழைத்தால் இது உலகம் எங்கும் திரையிடப்படும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில் 'இது மட்டுமல்ல இறைவன் நாடினால் இஸ்லாத்தின் வீரம் செறிந்த வரலாறுகள் திரைப்படமாக எடுக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்! அதற்கு இயக்குனர் அமீர், சிபிச்சந்தர் , அஹ்மது மீரான் , இப்ராஹிம் காசிம் செங்கிஸ் கான் உள்ளிட்ட நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்! என்றார. அல்லாஹ அவரின் இஹ்லாசான எண்ணங்களை நிறைவேற்றட்டும் !
  


இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா? எதிர்த்தாரா?

வரலாற்று சிறப்பு மிக்க ஆவணம் புத்தக வடிவில் 

கிடைக்குமிடம் சென்னை பஷாரத் பப்ளிகசன், 

சலாமத் பதிப்பகம்! மொத்த விற்பனைக்கு

இப்ரஹிம் காசிம்- 9043940103 
- See more at: http://www.onlinesengiskhan.com/2013/05/5.html#sthash.fCCcnp5Z.dpuf

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1