பெரம்பலூரில் அக். 27 முதல் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு!
குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 27-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர் உள்ளிட்ட 4,963 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பு அக். 27-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி அனைத்து வேலை நாள்களிலும் தேர்வு முடியும் வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நபர்களும் பயிற்சியில் பங்கேற்கலாம்.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்றோரில், இதுவரை 190-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த பயிற்சி, அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பணியாளர்களை பயிற்றுநர்களாகக் கொண்டு நடத்தப்படும். எனவே, அரசுப் பணியில் சேர இந்த வாய்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 97885 32233 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Category: மாணவர் பகுதி, மாவட்ட செய்தி
0 comments