தீபாவளி பண்டிகையையொட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை வி.களத்தூர் ரேசன் கடை இயங்கும்!
பெரம்பலூர் அக். 17–
பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பொது மக்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்கள் பெற்றிடும் வகையில் நாளை 19–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வி.களத்தூர் உள்பட பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் திறந்து வைக்கப்படும். அன்றைய தினம் பொதுமக்கள் அத்தியா வசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவது தவறாகும். அதனை மீறி ஓட்டல்கள், டீக்கடைகள் போன்றவற்றில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தால் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கலெக்டர் தரேஸ் அஹம்மது தெரிவித்தார்.
Category: மாவட்ட செய்தி
0 comments