பெரம்பலூரில் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற்றது!!
பெரம்பலூர்: நுலக தினத்தை முன்னிட்டு மாபெரும் புத்தக கண்காட்சி பெரம்பலூரில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தந்தை ரோவர் கல்வி நிறுவனத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த புத்தக கண்காட்சியில், ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்களும் கலந்து கொண்டனர். 10 ஆம் தேதி நடைபெற்ற புத்தக கண்காட்சியில், சுமார் 3,000க்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.
இதேபோல் நேற்று, மாநில அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி ரோவர் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தும் விதத்தில் ரோபோ செயல்பாடுகள், ராக்கெட் தத்துவம், மின் உற்ப்பத்தி திட்டங்கள், செயற்க்கை கோள் செயல்பாடு, உயர்மட்ட மேம்பாலங்களின் மாதிரிகள், எரிபொருள் சிக்கனம், சுற்றுப்புற சூழலில் ஏற்ப்படும் மாசுபாடு, கோள்களின் செயல்பாடுகள் என்று 100க்கும் மேற்ப்பட்ட படைப்புகள் மாணவர்கள் செய்து பார்வைக்காக வைத்திருந்தனர்.
மேலும், கார்கள், பைக்குகளின் தயாரிப்புகள், வடிவமைப்புகள் குறித்து வீடியோ படக்காட்சி காட்டப்பட்டது. இந்த கண்காட்சியை சுமார் 2,000க்கும் மேற்ப்பட்டோர் பார்வையிட்டு சென்றனர்.
செய்தி, படங்கள்: ர.ரஞ்சிதா
Category: மாவட்ட செய்தி
0 comments