வாலிகண்டபுரதில் மின்கம்பத்தில் ஏறிய தனியார் எலெக்ட்ரீஷியன் மின்சாரம் தாக்கி பலி!
பெரம்பலூர், அக். 21:
பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் மின் கம்பத்தில் ஏறிய தனியார் எலெக்ட்ரீஷியன் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த வடமாலை&செல்வாம்பாள் தம்பதியினரின் மகன் செல்வக்குமார்(22). இவர் தனியாக எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை 6 மணியளவில் வாலிகண்டாபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு மின் கம்பத்தின் மீது அவர் ஏறி, கோபு என்பவரது வீட்டிற்கு செல்லும் மின் ஒயர் துரு பிடித்திருந்ததால் அதனை (ஜம்பர்) பிரித்து அடித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் அவர் மின்கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் செல்வக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments