.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

ஆப்பிளால் வரும் புற்று நோய் ஒருஅதிர்ச்சி ரிப்போர்ட் !

Unknown | 10:28 PM | 0 comments



ஆப்பிள் பழங்களில் மெழுகு பூசுவது காலம் காலமாக நடந்து வந்தாலும், இப்போதுதான் வெளிச்சத்துக்குவ ந்துள்ளது.

உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய மெழுகைப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம்.பழங்கள், காய்கறிகள் நீண்ட நாள்கள் கெடாமல் பாதுகாக்க மெழுகு பூசுவது 1920-லிருந்தே புழக்கத்தில் இருக்கிறது. உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில வகை மெழுகுகள்தான் இதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியவை.இவ்வகையான மெழுகுகள் சில சாக்லேட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இராது என்கிறது ஆங்கிலப் பழமொழி. ஒரு காலத்தில் வேண்டுமானால் இந்தப் பழமொழி உண்மையாக இருக்கலாம்.ஆனால் இப்பொழுது நிலைமை வேறு.ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமே.கொலெட்ரோலைக் குறைப்பதற்கும் சரும நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் அது அரியபங்காற்றுகிறது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையான நல்ல பழம்.அதுவும் ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப் பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடுதான் சாப்பிட வேண்டும் என்று கூறுவர். ஏனெனில் பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு உதவுகிறது.ஆனால் இப்பொழுது சந்தையில் விற்கப்படும் ஆப்பிளைத் தோலோடு சாப்பிடுவது சாத்தியமில்லை. நம் நாட்டில் ஆப்பிள் விளைவதில்லை.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிலி, நியூசீலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்துரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் ஆகிய ஆப்பிள் வகைகளை இறக்குமதி செய்கிறார்கள்.அவை நம் நாட்டை வந்தடைய சுமார் 3 மாதங்களாவது பிடிக்கும்.அவற்றின் நிறம், சுவை கெடாமல் இருக்கவும் பூச்சிகள் நுழைந்துவிடாமல்தடுக்கவும், நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும் பொருட்டும் அதன் மேல் மெழுகு தடவி இறக்குமதி செய்கிறார்கள்.சாதாரண பழம் 10 நாட்களில் கெட்டுப்போகும் என்றால் மெழுகு பூசப்பட்ட பழம் 6 மாதம் வரை கெடாது.ஆரம்ப காலங்களில் பீஸ் மெழுகு, கார்னோபா மெழுகு, ஷெல்லாக் மெழுகுஆகிய மூன்று வகைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள்.அதுவும் இதனை ஒரு ஆப்பிளின் மேல் 3 மில்லிகிராம் அளவே தெளிக்க வேண்டும்.

"பீஸ் மெழுகு" என்பது தேனடையில் கிடைக்கும் மெழுகு. கார்னோபா, ஷெல்லாக் ஆகியவை மரங்களிலிருந்துகிடைக்கும் இயற்கை மெழுகுகள்.இவற்றால் ஆபத்துக்கள் குறைவு. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் இரசாயன மெழுகையும் தண்ணீரில் கரையும் பேரா·பின் மெழுகையும் பயன்படுத்துகிறார்கள்.நைட்ரேட் சேர்க்கப்படும் பழங்களில்"நைட்ரைஸோ மார்போலின்" என்னும் ஒரு இரசாயனம் உருவாகிறது. இது புற்றுநோய்க்கானமுக்கிய காரணி ஆகும்.நீங்கள் வாங்கிய ஆப்பிளை படத்தில் உள்ளதைப் போன்று கத்தியை வைத்துச் சுரண்டவும்.அதில் மெழுகுத் துகள் வெளியேறினால் அது மெழுகு பூசப்பட்ட பழமாகும்.நீங்கள் ஆப்பிளை எப்படிக் கழுவினாலும் அதிலுள்ள மெழுகு போகாது.பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன.முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் துரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும்.

இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள்.நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்டஅடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர்.அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர். பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமில வாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம்.சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தை விட பழங்களின் விமானப்பயணத்தால் காற்றுஅதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும்சீர்கெட்டு வருகிறதாம்.ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம். இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1