.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

போட்டித்தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்மாணவர்களுக்கு கலெக்டர் தரேஷ் அஹமது "அட்வைஸ்'!

Unknown | 9:42 PM | 0 comments



பெரம்பலூர்: கல்லூரி கல்வியுடன் நிற்காமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று வாழ்க்கையில் உயரங்களுக்கு செல்ல வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது தெரிவித்தார்.வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் தமிழ் இலக்கிய வகுப்பு நடத்தப்படுவதை நேற்று, பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது பார்வையிட்டார்.
மாணவர்களிடம் கலெக்டர் பேசுகையில்,மாணவ, மாணவிகளில் பெரும்பாலானவர்கள், முதல் பட்டதாரிகளாக படிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளீர்கள். நமது குறிக்கோள் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்.அரசு வேலை வாய்பிற்கான போட்டித் தேர்வுகளை எழுத பட்டப்படிப்புதான் தகுதியாக உள்ளது. நீங்கள் படித்து முடித்த பின், கல்லூரி ஆசிரியர் தேர்வு எழுதி ஆசிரியர்களாகவோ, போட்டித் தேர்வு எழுதி உயர் அலுவலர்களாகவோ செல்லலாம். அதற்கான வழிகளை இன்றே முடிவு செய்து கொள்ள வேண்டும். இலக்கியங்கள் தான், சமூகம் நல்ல சமூகமாக உருவாக வழிவகுக்கின்றன.மனித சிந்தனைகளை தூண்டுபவை இலக்கியங்கள். மாணவர்கள் கவிதை, கட்டுரை, காவியங்களை படிக்க வேண்டும். புத்தகங்கள் நம் சிந்தனை திறனை தூண்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இங்கு கல்வி கற்கும் மாணவியர்கள் பெரம்பலூர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டம் என்ற நிலை அடைய செய்து பெருமை தேடித்தர வேண்டும் என்றார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1