.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சுங்கச்சாவடிகளில் விரைவில் வருகிறது மின்னணு கட்டண வசூல்!

Unknown | 9:33 PM | 0 comments



புதுடெல்லி : சுங்கச் சாவடிகளில் மின்னணு கட்டண வசூல் என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த புதிய முறையின் மூலம், சுங்கச் சாவடிகளில் கட்டணங்களை செலுத்துவதற்கு பதிலாக முன்கூட்டியே பணத்தை செலுத்திவிடவேண்டும். கட்டணத்தை செலுத்தியவருக்கு சிம்கார்டு அளவிலான ‘எலக்ட்ரானிக் அட்டை’ வழங்கப்படும். அதை வாகனத்தில் பொருத் திக் கொள்ளவேண்டும். சுங்கச் சாவடியை கடக்கும் போது அதற்கான சுங்கக் கட்டணம் தானகவே கழித்துக் கொள்ளும். இந்த வசதியை பெறும் வாகனங்கள் செல்வதற்காக சுங்கச்சாவடிகளில் தனிப்பாதை இருக்கும் அந்த வழியாக அந்த வாகனங்கள் காத்திருக்காமல் விரைவாக செல்லமுடியும். இந்த திட்டம் நாடுமுழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், கட்டணத் தொகையை பெறுவதற்காக வங்கிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சுட்டிகாட்டினர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1