.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வீடு, மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?

Unknown | 8:43 PM | 0 comments



 


சென்னை போன்ற நகர் பகுதிகளில் சொந்த வீட்டு கனவை நனவாக்குவது பலருக்கு சவாலானதாகவே இருக்கிறது. நகர் பகுதியில் வீட்டுமனைகளை காண்பது அரிதான விஷயமாக இருக்க சொத்து மதிப்பும் மலைக்க செய்யும் விதத்தில் இருக்கிறது. அதனால் புறநகர் பகுதிகளை நோக்கி குடியிருப்பு எல்லைகள் விரிவாக்கம் அடைந்து வரும் நிலையில் அங்கும் இடத்தின் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இடத்தேர்வில் கவனம்

அதுவும் இடத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சூழ்ந்திருக்கும் இடத்துக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அந்த பகுதிகளின் சொத்து மதிப்பு ஏறுமுகமாகவே இருக்கிறது. மற்ற பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப இடத்தின் மதிப்பு அமைந்திருக்கிறது. எனினும் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது அதன் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக் கிறது.

அதனால் சொத்து வாங்குபவர்கள் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற பகுதியை தேர்வு செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது எந்த நோக்கத்திற்காக சொத்து வாங்கப்போகிறோம் என்பது பற்றியதாகும். உடனடியாக வீடு கட்டி குடியேறுவதாகவோ அல்லது வீடு வாங்குவதாகவோ இருந்தால் இடத்தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வழிகாட்டும் இணையதளம்

அந்த பகுதியை சுற்றிலும் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பது பற்றி அலசி ஆராய வேண்டும். இது பற்றி தெரிந்து கொள்ள இணையதளங்கள் உதவிகரமாக இருக்கின்றன. அதன் மூலம் வாங்கப்போகும் இடம் அமைந்திருக்கும் பகுதியில் எத்தகைய வசதி வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். குறிப்பிட்ட சில கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் அமைந்திருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை பட்டியலிட்டு விடலாம்.

இத்தகைய வசதி வாய்ப்புகள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சவுகரியமாக அமையும் வகையில் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அவர்களிடம் கலந்து பேசி சொத்து வாங்குவது பற்றிய இறுதி முடிவுக்கு வர வேண்டும். உடனடியாக குடியேறுவதாக இருந்தால் இத்தகைய வசதிகளை கவனத்தில் கொள்வது அவசியம். சில இடங்கள் வீட்டுமனை வாங்குவதற்கு ஏற்ற பகுதியாக இருக்கும். விலையும் குறைவாக இருக்கும். ஆனால் உடனடியாக வீடு கட்டி குடியேறுவதற்குரிய வசதியின்றி இருக்கும்.

குடியேறும் நோக்கம்

ஆனால் சில ஆண்டுகளில் அந்த பகுதி வளர்ச்சி அடையும் தருவாயில் இருக்கும். குறிப்பாக அந்த பகுதிக்கு அருகில் சகல வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு வசதிகள் நிறைந்திருக்கும். அது விரிவாக்கம் அடையும்போது இந்த பகுதியிலும் வளர்ச்சியின் தாக்கம் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட பகுதி முதலீடு நோக்கத்துடன் வீட்டுமனை வாங்குவதற்கு பொருத்தமானதாக இருக்கும்.

ஆகவே அங்கு முதலீடு செய்வதற்கே ஆர்வம் காட்ட வேண்டும். உடனடியாக குடியேறும் நோக்கத்தில் அந்த இடத்தை தேர்வு செய்யக்கூடாது. சில காலத்திற்கு பிறகுதான் வளர்ச்சி அடைந்துவிடுமே என்று நினைத்து குடியேறுவதற்கு முயற்சிக்கக்கூடாது. உடனடியாக வசிப்பதற்கு ஏற்ற வசதியை கொண்டிருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். அதிலும் வீடு கட்டுவதாக இருந்தாலோ, புது வீடு வாங்குவதாக இருந்தாலோ அந்த பகுதியில் சாலை வசதி எப்படி இருக்கிறது? முக்கிய பகுதிகளை விரைவாக சென்றடையும் வகையில் இணைப்பு சாலைகள் அமைந்திருக்கிறதா? போக்குவரத்து வசதியும் பல பகுதிகளை இணைக்கும் வகையில் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.

முதலீட்டுக்கு சாதகம்

கல்வி, மருத்துவம், குடிநீர் வசதி இருக்கிறதா? என்றும் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும். விலை குறைவாக இருக்கிறது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு வசிப்பிடத்தை தேர்வுசெய்யக்கூடாது. இந்த வசதிகள் எல்லாம் நிறைந்திருக்கிறதா? என்பதை உறுதி செய்வது நல்லது. அதிலும் எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும் பகுதியாக முதலீட்டுக்கு சாதகமாக இருக்கும் இடத்தில் வீடு கட்டி குடியேறுவதற்கு முனைப்பு காட்டக்கூடாது.

அதுபோல் முதலீடு நோக்கத்திற்காக மனை வாங்க தேர்வு செய்யும் பகுதியில் கட்டமைப்பு வசதிகள் குறைந்து காணப்படலாம். அதற்காக அந்த இடம் வளர்ச்சி அடையாது என்று முடிவு செய்துவிடக்கூடாது. நீண்டகாலத்துக்கு பிறகு வளர்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பதை நன்கு விசாரித்துவிட்டு அங்கு மனை வாங்குவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1