சென்னை உட்பட 6 விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு!
சென்னை உட்பட 6 விமான நிலையங்களைத் தனியார் மயமாக்கும் திட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட 6 விமான நிலையங்களைத் தனியார் மயமாக்க கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசின் திட்டத்தில் மாற்றமில்லை. இப்போது விமானப் போக்குவரத்துத் துறைக்கும், தனியார் மயமாக்கும் திட்டக்குழுவுக்கும் இடையில் வருமானப் பகிர்வு, பயணிகளின் கட்டணங்களை உயர்த்துவது உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து வேறுபாடு நேரிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, தனியார் மயமாக்கும் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.
Category: மாநில செய்தி

0 comments