லப்பைகுடிகாடு அருகே வாலிபருக்கு பாட்டில் குத்து: ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 4 பேர் கைது!
லப்பைகுடிகாடு அருகே உள்ள வடக்களூர் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 30). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த திருவள்ளுவனுக்கும் தேர்தலில் தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. திருவள்ளுவனின் மனைவி ஊராட்சி தலைவியாக உள்ளார். இந்நிலையில் பெருமத்தூர் செல்லியம்மன் கோவிலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வந்த திருவள்ளுவனுக்கும், மணிமாறனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திருவள்ளுவன் மற்றும் அவரது நண்பர்கள் வடக்களூரை சேர்ந்த ரமேஷ் (37), சின்னராசு (29), சங்கர் (34) ஆகியோர் மணிமாறனை பாட்டிலால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த மணிமாறன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து மணிமாறன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்கு பதிவு செய்து திருவள்ளுவன், ரமேஷ், சின்னராசு, சங்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Category: மாவட்ட செய்தி

0 comments