.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் டி.வி.டி. பிளேயரில் மறைத்து தங்கம் கடத்தல் !கேரள வாலிபர் கைது!

Unknown | 3:36 PM | 0 comments




துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் டி.வி.டி பிளேயரில் மறைத்து கடத்தி வந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரள வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரூ.27 லட்சம் தங்கம் கடத்தல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல்ரகுமான் (வயது 38) என்பவர் சுற்றுலா விசாவில் சென்று வந்திருந்தார்.

அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் டி.வி.டி. பிளேயர் இருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அதற்குள் தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.27 லட்சம் மதிப்புள்ள 900 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கைது

இது தொடர்பாக கேரளா வாலிபர் அப்துல்ரகுமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1