வி.களத்தூரில் இன்று நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நமது கோரிக்கை ஏற்கப்பட்டதால் ரத்து!

வி .களத்தூரில் புதிய பேருந்து விட கோரி இன்று (26-08-2014 ) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்திருந்தினர் .
வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை:
அரசு அதிகாரிகளும் பேருந்து உரிமையாளர்களும் பொதுமக்களுடன் நேற்று (25-05-2014) வேப்பந்தட்டையில் மதியம் சுமார் 2.30 மணியளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
நமது ஊர் பொதுமக்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
1) பேருந்துகள் சரியான நேரத்திற்கு பேருந்துகள் இயக்க பட வேண்டும்
2) 2-ம் எண் அரசு பேருந்து வி .களத்தூரிலிருந்து புறப்படும்போது அதே சமயம் மற்றொரு புதிய பேருந்து பெரம்பலூரில் இருந்துவி. களத்தூர் நோக்கி புறப்பட வேண்டும்.
3) கள்ளகுறிச்சி இருந்து சின்ன சேலம்,கூகையூர், கைகளத்தூர்,வி.களத்தூர் வழியாக பெரம்பலூருக்கு புதிய பேருந்து இயக்க பட வேண்டும்.
4) பெரம்பலூரில் இருந்து இரவு 10 மணியளவில் வி .களத்தூருக்கு புதிய பேருந்து இயக்க பட வேண்டும்.
மேலும் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும் என மக்கள் ஆவலுடன் காத்திருகிறார்கள் .
தகவல் : M.சபியுல்லாஹ்.


Category: உள்ளுர் செய்தி

0 comments