.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் எம்.பி., எம்.எல்.ஏ. வழங்கினர்!

Unknown | 9:15 PM | 0 comments



பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை ஆர்.பி. மருதராஜா எம்.பி. மற்றும் இரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

விலையில்லா சைக்கிள்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழக முதல்–அமைச்சரின் விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் நடைபெற்றது. விழாவில் ஆர்பி.மருதராஜா எம்.பி. மற்றும் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் 422 மாணவ மாணவியர்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். விழாவில் மருத ராஜா எம்.பி. பேசிய தாவது:–

உங்கள் ஊரிலேயே படிக்கலாம்

தமிழக முதலமைச்சர் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகின்றார். இதனடிப்படை யில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்க முதலமைச்சர் உத்தர விட்டதன் அடிப் படையில் 422 மாணவ, மாணவியர் களுக்கு வழங்கப்பட்டுள் ளது.

பெண்கல்விக்கு முக்கியத் துவம் கொடுத்து மாணவி யர்கள் பள்ளிக்கல்வியை நன் றாக படித்து முடித்தால் மேலும் உங்கள் ஊரின் அருகிலே
யே பட்டபடிப்பு படிக்க தமிழக முதல்– அமைச்சர் தற்போது வேப்பூரில் அரசு மகளிர் கலைக் கல்லூரியை ஏற்படுத்தி தந்துள்ளார். அக்கல்லூரியில் நீங்கள் விரும்பும் பாடபிரிவினை தேர்ந்தெடுத்து நன்றாக படிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பெரம் பலூர் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயக்குமார், நகர் மன்றத் துணைத்தலைவர் ஆர்.டி. இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் என்.சேகர், பள்ளி தலைமை ஆசிரியர் சி.ஜெய ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1