.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் வழியாக அரியலூரில் இருந்து நாமக்கல்லுக்கு பாதை அமைத்து ரயில் விட வேண்டும் பெரம்பலூர் M.P மருதராஜா வலியுறுத்தல்!

Unknown | 12:19 AM | 0 comments






பெரம்பலூர், : அரியலூரில் இருந்து நாமக்கல்லுக்கு பெரம்பலூர் வழியாக புதிய பா தை அமைத்து ரயில் இயக்க வேண்டும் என்று எம்பி மருதராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
கடந்த காங்கிரஸ் ஆட்சி யின் போது ஆய்வு நோக் கில் அறிவிக்கப்பட்டு செ யல்படுத்தப்படாமல் விடப்பட்ட இந்த திட்டத்தை அமல்படுத்தி புதிய ரயில்கள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட உத்தமர்கோவில் பகுதியில் ரயில் பாதையில் சுரங்கப் பாதை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
எறையூர், அயன்பேரையூர், பென்னக்கோணம் ஆகிய ஊராட்சிகளில் ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்க ரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப் பட்டு கைவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் பருத்தி அதிகம் விளைவதால் மத்திய அரசின் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும்.
சென்னை- குருவாயூர், சென்னை- ராமேஸ்வரம், சென்னை- மங்களூர் ஆகிய விரைவு ரயில்கள் இரு மார்க்கத்தில் செல்லும் போது லால்குடியில் நின் றுச் செல்ல வேண்டும். தனி யாக முன்பதிவு வசதி செ ய்துதர வேண்டும் என்றார்.
மேலும், இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1