"வேப்பந்தட்டை உழவர் சந்தை செயல்பட நடவடிக்கை தேவை'!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் செயல்படாமல் உள்ள உழவர் சந்தையைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கு மாவட்
டத்தில் உள்ள அனைத்துப் பகுதி விவசாயிகளும் வந்து சென்றதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது.
இதைத் தவிர்க்க வேப்பந்தட்டை ஒன்றிய விவசாயிகளுக்காக வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே 2011-ல் புதிய உழவர் சந்தை திறக்கப்பட்டது.
ஆனால் போதிய பராமரிப்பின்றி ஒரு சில மாதங்களிலேயே மூடப்பட்டது. இதனால் வேப்பந்தட்டை ஒன்றிய விவசாயிகள் காய்கறிகளை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்கின்றனர்.
மேலும், அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் காய்கறி வாங்க பெரம்பலூருக்கு வந்து செல்கின்றனர்.
எனவே, மூடிக்கிடக்கும் உழவர் சந்தையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேளாண் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments