நகைக் கடைகளுக்கு திடீர் கிடுக்குப்பிடி தங்க நகை சேமிப்பு திட்டம் நடத்த தடை: மத்திய அரசு உத்தரவு!
சென்னை: தங்க நகைக் கடைகளில், சேமிப்பு திட்டம் நடத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தங்க நகைக்கடைகளில், பெரும்பாலானவற்றில் தங்க நகை சேமிப்பு திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சேரும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் 15 மாதம் முதல் அதிகபட்சம் 36 மாதங்கள் வரை சேமிப்பு திட்டத்தில் சேரலாம். குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் பணம் செலுத்திய பிறகு, தங்க நகையை வாங்கி கொள்ளலாம். இந்த சேமிப்பு மூலம் தங்க நகை மட்டுமே வாங்க முடியும். தங்க நாணயம் மற்றும் பிற பொருட்களை வாங்க முடியாது. இத்தகைய சேமிப்பு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தங்க நகைக்கடைகளிலும் ஏராளமானோர் தங்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு என்ற பெயரில் சேமித்து வருகின்றனர். இந்தியாவில் இத்தகைய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் சுமார் 1.50 கோடி பேர் வரை இந்த சேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் பல லட்சம் கோடிக்கு பணம் புழக்கம் இருந்து வருகிறது. இந்த வகையிலான சேமிப்பு திட்டத்துக்கு மத்திய கம்பெனிகள் விவாகரத்துறை கடந்த 1.4.2014 முதல் தடை விதித்துள்ளது. மேலும், ஏப்ரல் 1ம் தேதி முதல் தங்க நகை சேமிப்பு திட்டத்திற்கு பல கெடுபிடிகளையும் விதித்தது. அதாவது, புதிய கம்பெனிகள் சட்டம் 2014ன் படி இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் உத்தரவில் ‘தங்க நகை சேமிப்பு திட்டத்தை தங்கள் இஷ்டத்திற்கு தொடர முடியாது. எவ்வளவு வாடிக்கையாளர்களை வேண்டுமானாலும் சேர்க்க முடியாது. அதிகபட்சம் 11 மாதத்தை தாண்டி முதலீட்டு திட்டத்தை தொடர முடியாது. அவ்வாறு தொடர வேண்டுமானால் நகைக்கடையின் மொத்த சொத்து மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சேமிப்பு திட்டத்தில் முதலீட்டாளர்களை சேர்க்க முடியும்’. இத்தகைய கெடுபிடியால் பல தங்க நகைக்கடைகள் தங்க நகை சேமிப்பு திட்டத்தை கைவிட தொடங்கியுள்ளன. முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை திருப்பி கொடுத்து வருகின்றனர். முதலீட்டாளர்கள் செலுத்திய பணத்தை, பணமாகவும், நகையாகவும் பெற்று கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளன. கெடுபிடிகளால் தங்கள் வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் இழக்க விரும்பாத சில நகைகடைக்காரர்கள், சேமிப்பு திட்டத்தை 11 மாதங்களாக குறைத்து வருகின்றன. சில கடைகள் இந்த சேமிப்பு திட்டம் வேண்டாம் என்று வெளியேறி உள்ளன. மத்திய அரசின் இந்த திட்டத்தை, அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் முழுமையாக அமல்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: மத்திய அரசின் தங்க நகை சேமிப்பு திட்டத்துக்கு தடை என்பது பிரைவேட் லிமிடெட் மற்றும் லிமிடெட் என்ற பெயரில் இயங்கும் நகைக்கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். தனியார் உரிமையாளர், பங்குதாரர்கள் மூலம் நடத்தப்படும் நகைக்கடைகளுக்கு பொருந்தாது. ஏழைகள், கூலி வேலை செய்து சம்பாதிப்போர் தினமும் கிடைக்கும் சம்பளத்தில் சிறிதளவை சேமித்து இது போன்ற சேமிப்பு திட்டம் மூலம் பயனடைந்து வந்தனர். தற்போது, தடையால் அவர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். மொத்தமாக பணத்தை திரட்டி நகை வாங்குவது என்பது முடியாத காரியம். தமிழகத்தில் இதுபோல் சுமார் 8 முதல் 9 லட்சம் பேர் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் உள்ளனர். அரசின் தடையால் சில நகைக்கடைகாரர்கள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்தி வருகின்றனர். சிலர் சேமிப்பு திட்டத்தை 11 மாதங்களாக குறைத்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Category: மாநில செய்தி

0 comments