சிகரெட் பழக்கத்தை விட்டொழிக்க அருமையான வாய்ப்பு !
புகை மனிதனின் நல்வாழ்வுக்கு பகை
என்று தெரிந்திருந்தும் நம்மில் பலர் அத்தீய பழக்கத்தை விட்டொழிக்க தயாராக இல்லை..
பகையென தெரிந்தும் அந்தப் புகையை கைவிட மறுக்கிறீர்களே.. என்று புகைக்கு அடிமையான அன்பர்களிடம் கேட்டால்.. பழகியாச்சு.. சட்டென்று விட முடியவில்லை என்கிறார்கள்.
ரமளான் மாதம் வந்து விட்டால் இந்த மாதிரியான தொடர் புகைப்பிரியர்கள் கூட அல்லாஹ்விற்காக புகைப்பதை சுமார் 14 மணி நேரங்கள் மறந்து நோன்பிருக்கிறார்கள்..!
சாதாரண நாள்களில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 2 சிகரெட் புகைத்து தள்ளும் இத்தகையோர் ரமளான் காலத்தில் 14 மணி நேரங்கள் அதனை தொடாமல் கட்டுப்பாடாக இருக்க முடிகிறது என்றால்….
இதே கட்டுப்பாட்டை ரமளான் அல்லாத காலங்களிலும் உங்களுக்குள் விதித்துக் கொள்ள இயலும் தானே..!?!?!
ரமலானில் அல்லாஹ் பார்க்கிறான் என்பதற்காக சிகரெட்டை தொடாமல் இருந்தது போல்.. ரமளான் அல்லாத காலங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தை நீங்கள் உருவாக்கி கொள்வதற்கான பயிற்சி பட்டறை தான் இந்த ரமளான் நோன்பு..!
தீவிர புகைப்பிரியர்களுக்கு அந்த தீய பழக்கத்திலிருந்து விடுதலை பெற ரமளான் ஒரு அருமையான சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்…!
Category: சமுதாய செய்தி
0 comments