.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் பலத்த பாதுகாப்பில்.....!

Unknown | 10:50 PM | 0 comments


ரியாத்: வளைகுடா நாடுகளில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பதட்ட சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் தற்பொழுது பலத்த பாதுகாப்பில் இருந்து வருகின்றன. இங்கு விசேட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் இருப்பதுடன், பிரயாணிகளும் அவர்களது உடமைகளும் துருவப்படுகின்றன.


ஏற்கனவே சவுதி-ஈராக் எல்லைப் பகுதியில் 30 ஆயிரம் இராணுவத்தினரை சவுதி அரேபியா குவித்து, கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்கள் இதுவரைக்கும் 135 காஸா முஸ்லிம்களை பலியெடுத்திருக்கின்றது. காஸா நிலைமை மோசமடைந்திருக்கும் இந்நிலையிலும் சவுதி அரேபியா உட்பட இன்னும் இதர அரபு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக மௌனம் காத்து வருகின்றன.

இத்தகைய அரபு நாடுகளின் மௌனம், போராளிகளை இந்நாடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ள வழிவகுக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளதால், தரை மற்றும் ஆகாய ரீதியான பாதுகாப்பை சவுதி அரேபியா தற்பொழுது பலப்படுத்தியிருக்கின்றது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1