துபாயில் 'ஈமான்' அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி - அனைவரும் பங்கேற்க அழைப்பு !
ஜுலை 24, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி
துபாய் ஈமான் அமைப்பு புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சியினை ஹிஜ்ரி 1435 ரமழான் பிறை 27 ( 24.07.2014 ) வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு தராவீஹ் தொழுகைக்குப் பின் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்த இருக்கிறது.
இந்நிகழ்வில் பள்ளபட்டி எம்.ஏ. முஹம்மது லுத்புல்லாஹ் பிலாலி B.Com, M.A. சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
சொற்பொழிவுக்குப் பின் வழக்கம் போல் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நள்ளிரவு ஒரு மணிக்கு ஈமான் அமைப்பின் நிகழ்ச்சிகள் நிறைவுறும்.
பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் கலந்து இப்புனித இரவின் நற்பயனை அடைய அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு 055 800 79 09 / 050 51 96 433 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
குறிப்பு :
நிகழ்ச்சிக்குப் பின் உணவு வழங்கப்படும்.
Category: துபாய்


0 comments