.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

நோன்பும் சில முதல் உதவிகளும்!

Unknown | 8:32 PM | 0 comments




மயக்கம்:

நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்ப்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் கசக்கிவிடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

தலைவலி:

கை கட்டை விரல் நகத்திற்கு கீழ் பகுதி (கை ரேகைக்காக இங்க் வைக்கும் பகதி) முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் அழுத்தம் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரவீர்கள்.

வயிற்று உபாதைகள்:

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும். கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கிம் (2வது விரலுக்கும் 3வது விரலுக்கும்)இடைப்பட்ட ஜவ்வு பகுதியில் 1 நிமிடம் அலுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறுவலி, உடல்வலி போன்றவை தீரும்.

மூச்சுத் திணறல்:

இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக 1 நிமிடம் அழுத்தம் கொடுப்பதன் மூலம் மூச்சுத் திணறல் சரியாகும்

மேற்கண்ட எளிய முறைகலை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.

அருள்வளம் மிக்க ரமளான் மாதத்தை அடைந்து அதில் நற்செயல்களை அதிகம் செய்து ஏகஇறைவனிடமிருந்து ஏராளமான கூலிகளைப் பெற்று அதன் மூலம் தீமைகளை அழித்து சொர்க்கம் சென்று இறைவனை கண்டு மகிழ்ச்சி அடையும் நன்மக்களாக ஆக்கி அருள் புரிவானாக !

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடலையும், மனதையும், நோன்பை முழுமையாக நிறைவேற்றி, அதற்கான முழுமையான நற்கூலியைப் பெற்றுக் கொண்டவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்!!

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1