கல்லாறு குறுக்கே கட்டப்படும் விசுவக்குடி நீர்த்தேக்கப் பணி விரைவில் நிறைவடையும்- மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்!
ரூ. 19 கோடியில் கட்டப்படும் விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டப்பணி விரைவில் நிறைவடையும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் விசுவக்குடி ஊராட்சி வாலையூர் - செம்மலை இடையே கல்லாறு ஓடையின் குறுக்கே கட்டப்படும் விசுவக்குடி நீர்த்தேக்கப் பணிகளை அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் மேலும் கூறியது:
மாவட்டத்தின் நீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில், விசுவக்குடி கல்லாறு ஓடையின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், ரூ. 19 கோடியில் கல்லாறு ஓடையின் குறுக்கே நீர்தேக்க கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. 30.67 மில்லியன் கன அடி நீரைச் சேமிக்கும் வகையில், சுமார் 615 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் நீர்தேக்கத்தில் 2 மதகுகள் அமைக்கப்படுகிறது.
இதன்மூலம் நேரடியாக 859 ஏக்கர் புன்செய் நிலமும், மறைமுகமாக 2 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.
மதகின் மூலம் வெங்கலம் ஏரிக்குக் கீழுள்ள சுமார் 421.41 ஏக்கர் ஆயக்கட்டிற்கு உறுதி செய்யப்பட்ட நீரும், நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதால் கிணற்றுப் பாசனம் மூலம் கூடுதலாக 169 ஏக்கர் புன்செய் நிலங்களும் பாசன வசதி பெற வழி ஏற்பட்டுள்ளது.
முதன்மையான கரை அமைக்கும் பணியில் 14 மீட்டர் ஆழத்திற்கு மண் அகற்றப்பட்டு, நீர் புகாத அமைப்பை ஏற்படுத்தும் பணி மற்றும் நீர் வழிந்தோடும் பகுதியில் கான்கீரிட் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. கரையின் இடது ஓரத்தில் உள்ள குன்றில் ஆய்வு மாளிகை, பூங்கா அமைப்பது மற்றும் வேப்பந்தட்டை வட்டத்திற்குள்பட்ட பகுதிகளின் குடிநீர் தேவைக்காக குழாய் மூலம் நீர் எடுத்துச் செல்லும் வகையில் ஏரியின் நீர்ப்பிடி பகுதியை ரூ. 3 கோடியில் ஆழப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்தப்பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவடையும் என்றார் அவர். ஆய்வின்போது பொறியாளர், உதவி பொறியாளர் உடனிருந்தனர்.

Category: மாவட்ட செய்தி

0 comments