பெரம்பலூர் அருகே பரிதாபம் பஞ்சராகி நின்ற லாரி மீது வேன் மோதி 3 பேர் பலி! 12 பேர் படுகாயம்!
பாடாலூர், ஜூலை 12:
பெரம்பலூர் அருகே பஞ்சராகி நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 பேர் பலியாயினர். 12 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூரிலிருந்து திருச்சிக்கு கடப்பா கற்களை ஏற்றிக�கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. டிரைவர் வீராகுமார்ரெட்டி(26). இவர் அனந்தபூர் மாவட்டம் கதிரி தாலுகா கருக்கப்பள் ளியை சேர்ந்தவர். கிளீனர் கொண்டையா(25). இவர் கடப்பா மாவட்டம் வேலம்பள்ளியை சேர்ந்தவர். இந்த லாரி நேற்று அதிகாலை 3 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அடு த்த டயர் தொழிற்சாலை அருகே வந்தபோது முன் பக்க இடது டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரை வர் வீராகுமார் ரெட்டி, லாரியை சாலை ஓரம் நிறுத்தினார். அவர் டயரை மாற்றிக் கொண்டிருக்க, கிளீ னர் கொண்டையா பின் னால் வரும் வாகனங்களு க்கு எச்சரிக்கை சைகை காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட் டம் சிந்தாலூர் தாலுகா ரோடுகுண்டு பகுதியை சேர் ந்த 13 பேர், திருவண்ணா மலை கோயிலுக்கு சென்று விட்டு, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை ஆந்திராவை சேர்ந்த சேஷாஜலபதி (42) என்பவர் ஓட்டி வந்தார். வேகமாக வந்த அந்த வேன்
லாரி கிளீனர் கொண் டையா சைகை காட்டியதைக் கவனிக்காமல் அவர் மீது பயங்கரமாக மோதி இழுத்துச்சென்று லாரியின் பின்பக்கம் மோதியது. இதில் கிளீனர் கொண் டையா, வேனில் இருந்த பால்ராஜ் ஷெட்டி(69), வீரேஸ்குமார் ஷெட்டி(45) ஆகியோர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். வேனில் இருந்த வீரேஸ்குமார் மனைவி விஜயலட்சுமி, மகன் வினய்குமார், வேன் டிரைவர் சேஷாஜலபதி, ஷோபாராணி, குமா ரசாமி, புஷ்பாவதி, நாக வேணி, வெங்கிடசாமி, வாண் டையா, நாகராஜ் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த பெரம்ப லூர் எஸ்பி சோனல் சந் திரா, டிஎஸ்பி கோவிந்த ராஜ் மற் றும் பாடாலூர் போலீசார் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலி யான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments