ரஞ்சன்குடி கோட்டையில் சரிந்து விழுந்த கோட்டையின் மேல்சுவரை புனரமைக்க பரிந்துரை தொல்லியல்துறை அதிகாரி தகவல்!
பெரம்பலூர்,ஜூன் 18:
ரஞ்சன்குடி கோட்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை உதவி பராமரிப்பு அலுவலர் ஆய்வு செய்து சரிந்து விழுந்த கோட்டையின் மேல்சுவரை புனரமைக்க பரிந்துரை செய்திருப்பதாக கூறினார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க் கும் சுற்றுலாத் தலம் ரஞ்சன்குடி கோட்டை. பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18கி.மீ. தொலைவில், மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன் குடியில் இக்கோட்டை அமைந்துள்ளது. 16ம் நூற்றாண்டின் இறுதி யில் குன்றின் மீது அமைக்கப்பட்ட இந்த கோட்டைக்கான கட்டுமானப்பணி, நவாப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்த தூங்கானை மறவன் என்ற குறுநிலமன்னரால் தொடங்கப்பட்டது. இதற்கு ஆற்காடு நவாப்கோட்டை, ரஞ்சன்குடி கோட்டை, குன்றின்மீது கட்டப்பட்டதால் துருவத்துக்கோட்டை என பல பெயர்கள் உண்டு.சந்தாசாஹிப்& பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமதுஅலி&ஆங்கிலேய கூட்டுப்ப டைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டாபோர் ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடைபெற்றதாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க இக்கோட்டையில் இன்றவும் கோட்டையைச் சுற்றி அமைக்கப்பட்ட அகழிகள், விதானமண்டபம், பீரங்கிமேடை, கொடிமேடை, தண்டனைக்கிணறு, வெடி மருந்துக்கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, பிற்கால பாண்டியர்கள் பிடியில் இருந்த போது கட்டப்பட்ட மண்டபம், முகமதியர்கள் ஆண்டபோது அமைக்கப்பட்ட மசூதிகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத படி துளைகள் இடப்பட்ட சுற்றுச்சுவர், குதிரை லாயம் மற்றும் கடல்மட்டத்திலிருந்து 152அடிஉயரமுள்ள கோட்டைஉச்சியில் குளம் ஆகியன அழியாமல் உள்ளன.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி கதை வசனத்தில் நடிகர் பிரசாந்த் நடித்து வெளிவந்த பொன்னர்&சங்கர் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்தக் கோட்டையில் தான் படமாக்கப்பட்டது. இக்கோட்டையில் கடந்த 2013 ஜூலை மாதம் தொடங்கி 2014மார்ச் வரை கோட்டைக்கு செல்கிற படிகள் சீரமைப்பு, புதர்களை அகற்றுதல், கோட்டைச்சுவரை பாதித்த மரக்கன்றுகளை அகற்றுதல் போன்ற பராமரிப்புப் பணிகள் இந்திய தொல்லியல்துறையின் பராமரிப்பு நிதியைக் கொண்டு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இந்திய தொல்லியல்துறையின் உதவி பராமரிப்பு அலுவலர் (தஞ்சை) வாசுதேவன் கோட்டைக்கு வந்து நடந்து முடிந்துள்ள பணிகளைப் பார்வையிட்டார். அப்போது அவர் தெரிவித்தாவது :
ரஞ்சன்குடி கோட்டையில் கோட்டையின் கிழக்குப்பகுதியில் சரிந்து விழுந்துள்ள மேல்சுவரை புனரமைத்திட இந்தியத் தொல்லியத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள் ளது. அதற்கான நிதிஒதுக்கீடு மற்றும் அனுமதி கிடைத்தவுடன் புனரமைப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்படும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பராமரிப்புப் பணிகளால் கோட்டை உச்சிக்கு சிரமமின்றி சென்று வர ஏதுவாக உள்ளது என்றார். ஆய்வின் போது கோட்டையின் முன்னாள் காவலாளி காசிம்பாய் உடனிருந்தார்.

Category: மாவட்ட செய்தி

0 comments