பெரம்பலூரில் கல்வி கடன் வழங்கும் முகாம்! மாணவ, மாணவியருக்கு கலெக்டர் தரேஸ் அஹம்மது அழைப்பு!
பெரம்பலூர்,ஜூன்21:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தரேஸ் அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகளும் பங்கு பெறும் மாபெரும் வங்கிக் கடன் வழங்கும் முகாம் ஜூலை 26, ஆகஸ்ட் 2 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதன்படி ஜூலை 26ம் தேதியன்று காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வங்கிக்கடன் வழங்கும் முகா மில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களும், குரும்பலூர், அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரும், ஆகஸ்ட் 2ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவு ள்ள முகாமில் ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்கள், லெப்பைக்குடிகாடு பேரூராட்சி மாணவ, மாணவியரும், 23ம் தேதி நடைபெறவுள்ள முகா மில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்கள், குரும்பலூர், அரும் பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு பேரூராட்சிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
முகாமிற்கு குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கல்லூரி மதிப் பெண் பட்டியல், பாஸ் போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பாஸ் போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு, பட்டமேற்படிப்பின் சான்றிதழ்கள், பெற்றோரின் ஊதியச்சான்றிதழ், வருமான சான்றிதழ், கல் லூரி கட்டண விபரம், மருத்துவ, பொறியியல் கல்விக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணை ஆகிய ஆவணங்களை கொண் டுவர வேண் டும்.
மேலும் விண்ணப்பதா ரர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். எந்த மாவட்டத்திலும் கல்வி பயிலுபவராக இருக்கலாம். கல்விக்கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மாவ ட்ட ஊரகவளர்ச்சி முகமைத்திட்ட அலுவல கம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி
0 comments