பெரம்பலூரில் போலி குடும்ப அட்டை தடுக்க ரேஷன் ஊழியர்களுக்கு உத்தரவு!ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் தகவல்!
பெரம்பலூர்,ஜூன்22:
போலி குடும்ப அட்டைகளை பயன்படுத்துவோருக்கு நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் உடந்தை யாக இருந்து விடக்கூடாது என ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறையின் பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் நியாய விலை விற்பனையாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத்துறையின் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவா ளர் சின்னத்தம்பி வரவேற் றார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் குறைதீர்க்கும் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு கலெக்டர் தரேஸ்அகமது தலைமை வகித்து பேசுகை யில்,
நியாயவிலைக் கடை களை காலதாமதமின்றி குறித்த நேரத்தில் திறந்து வைக்க வேண்டும். மாலை நேரங்களில் வயல் வேலைகளை முடித்துத் திரும்பும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை கடைகளைத் திறந்து வைத்து தேவையான பொருட்களை வழங்கிட வேண்டும். நியாயவிலைக் கடைகளின் செயல் பாடுகள் குறித்து தொடர்ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுகளின் போது முறை கேடுகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து கண்டறியப்பட்டால், அவர்களது பெயர்கள் நியாயவிலைக் கடைகளின் பெயர்ப்பலகைகளில் ஒட்டப்படும். எனவே எடை களைக் குறைத்து பொருட் களை விநியோகிப்பது தொடர்பான புகார்களில் சிக்காமல் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் கடமை உணர்வு டன் பணியாற்ற வேண்டும்.
வெளிமாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள், இறந்து போனவர்கள், இரண்டு முகவரியில் நியாயவிலை கார்டுகளை உபயோகிப்பவர்களை கண்டறிந்தால் உடனே மாவட்ட வழங்கல் அலுவலரிடமோ, கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடமோ தகவல் தெரி வித்து போலி குடும்ப அட் டைகளை தடைசெய்யத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மாறாக போலி குடும்பஅட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு விற்பனையாளர் கள் உடந்தையாக இருந்து விடக்கூடாது என்றார். கூட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பதிவாளர்கள் பெரம்பலூர் சுந்தரமூர்த்தி, வேப்பந்தட்டை மருதமுத்து, ஆலத்தூர் குமார், வேப்பூர் வாசுகி மற்றும் நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments