.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சென்னை விமான நிலையத்தில் 23 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்,மும்பை பயணி கைது!

Unknown | 8:46 PM | 0 comments



சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில 23 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த மும்பை பயணி கைது செய்யப்பட்டார்.விமானம்சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு நேற்று இரவு ஒரு விமானம் வந்தது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் இருந்து வந்த பயணிகளை சோதனையிட்டனர். அதில் ஒரு பயணி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை கடுமையாக சோதனையிட்டனர்.தங்க கட்டிகள்அவரது பேக்கை சோதனையிட்டபோது, துணிமணிகளுக்கு அடியில் தங்க கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 23 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்தனர். அவர் பெயர் சந்த்வானி (வயது 32). மும்பையைச் சேர்ந்தவர் ஆவார். அவருக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்று அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1