.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

உயர்கல்வி பயில இடம் தராத குடும்பச்சூழல் சாதனை படைத்த சகோதரிகள் தற்கொலை!!

Unknown | 10:00 PM | 0 comments

விருத்தாசலம் அருகே பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த சகோதரிகளுக்கு உயர்கல்வியை தொடர்வதில் வீட்டுச் சூழல் ஒத்துழைக்காத நிலையில் இருவரும் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்த சாலத்தை அடுத்த கம்மாபுரத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி முருகேசன். இவரது மனைவி ராஜ லட்சுமி. இவர்களின் மகள் களான கிருத்திகாவும்(18), சரண் யாவும்(17) கம்மாபுரம் அரசு மேநிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தனர். மகன் ஹரிச்சந்திரன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை வெளியான தேர்வு முடிவில் கிருத்திகா 930 மதிப்பெண்ணும், சரண்யா 928 மதிப்பெண்களும் பெற்று, பள்ளி அளவில் முதல் 2 இடங்களைப் பிடித்தனர். இதனால் வீட்டில் பெற்றோர்கள் மட்டு மல்ல கிராம மக்களும் மகிழ்ச்சி யடைந்தனர்.

மகிழ்ச்சியும் துக்கமும்

மகள்கள் இருவரும் நல்ல மதிப் பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தைப் பிடித்திருந்ததை எண்ணி பெற்றோர்கள் சந்தோஷப் பட்டனர். ஆனால் தச்சுத் தொழில் செய்து வாழ்க்கையை நகர்திக் கொண்டிருக்கும் முருகேசனும், ராஜலட்சுமியும் இதய நோயாளிகள். மேலும் அவ்வப் போது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றுவரு கின்றனர். எனவே, தங்களுக்கு திடீரென ஏதேனும் நேர்ந்து விட்டால், மகள்களின் எதிர்காலம் என்ன வாகும் என யோசித்தனர். முதலில் ஒரு மகளை திருமணம் செய்து வைத்து விடலாம் எனவும், மற்றொரு மகளை படிக்க வைப் போம். அதன் பிறகு, நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மூத்த மகள் மூலமாக 2-வது மகளுக்கு வாழ்க்கை அமைந்து விடும் என பெற்றோர்கள் ஆலோசனை நடத்திக் கொண் டிருக்க, இதைக் கேட்டுக்கொண் டிருந்த சகோதரிகள் மனமுடைந்துள்ளனர். பெற்றோரின் கவலையை எண்ணி இருவரும் சோகமான நிலையில் இருந்துள்ளனர். இதனிடையே தேவன்குடியில் உள்ள உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை பெற்றோர்கள் சென்றுவிட, அத்தருணத்தில் சகோதரிகள் இருவரும் வீட்டில் துப்பட்டாவைப் பயன்படுத்தித் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். இந்த அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

போதனை குறைவு

மாணவிகள் இறந்த சம்பவ சம்பவம் குறித்து பேராசிரியர் கல்யாணி கூறுகையில், கல்வி ஏழைகளுக்கு ஒரு எட்டாக் கனி யாகவே இருக்கிறது என்பதற்கு மாணவிகளின் இறப்பு ஒரு உதார ணம். பள்ளிகளில் பன்முகத் திறன் வளர்ப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. தனியார் பள்ளிகளில்தான் படிப்பு... படிப்பு... மதிப்பெண்... மதிப் பெண்.... என்ற மன அழுத்தம் இருக்கும். ஆனால் தற்போது அரசுப் பள்ளிகளிலும் அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப் படுவதில்லை. மாணவிகள் இதுபோன்ற நிலைக்கு ஆளாகக் காரணம் அவர்களிடம் போதிய மனவலிமை இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றார்.

இலவச உயர் கல்வி: எம்.ஆர்.கே பொறியியல் கல்லூரி

வறுமையின் காரணமாக இரு மாணவிகள் தூக்கிட்டுத் தற் கொலை செய்துகொண்ட செய்தி அறிந்த கடலுர் மாவட்டம் காட்டு மன்னார்கோயிலில் உள்ள எம்.ஆர்.கே.பொறியியல் கல்லூரியின் தலைவர் பி.கதிரவன், அரசுப் பள்ளிகளில் பயின்று, 1000 மதிப்பெண்கள் பெற்று, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு இலவச உயர் கல்வி அளிக்கப்படும் என அறிவித் துள்ளார். கல்விக் கட்டணம், பேருந்துக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் மதிய உணவு வரை வழங்கப்படும் எனவும், இந்த சேர்க்கைத் தகுதி அடிப்படையில் மட்டும் நடைபெறும் எனவும், சிபாரிசுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1