கால்நடை மருத்துவ, சட்டப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்!!
பி.ஏ. பி.எல். (ஆனர்ஸ்), பி.காம்.பிஎல் (ஆனர்ஸ்), பி.ஏ.பி.எல். ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களும், கால்நடை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களும், உடற்கல்வி படிப்புகளுக்கான (பிபிஎட், எம்பிஎட்) இன்று (திங்கள்கிழமை) முதல் வழங்கப் படுகின்றன. ஆனர்ஸ் சட்டப் படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதிக்குள்ளும், பிஏ.பி.எல். படிப்பில் சேர ஜூன் 13-ம் தேதிக்குள்ளும், கால்நடை மருத்துவப் படிப்பு மற்றும் உடற்கல்வி படிப்புகளில் சேர ஜூன் 2-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: உயர் கல்வி, கல்வி, மாநில செய்தி, மாவட்ட செய்தி
0 comments