21ல் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்!!
பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், மாணவர்கள் படித்த பள்ளிகளிலே வரும் 21-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப் பட்டது. தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவு வெளியான நாள் அன்றே அவர்கள் தேர்வெழுதிய மையத்திலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவ-மாணவிகளுக்கு மே 21-ம் தேதி அந்தந்த பள்ளியிலேயே சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் கூறியுள்ளார்.
அன்றைய தினம் பள்ளியிலேயே அவர்களின் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு பதிவுக்கு ஆன்லைனில் பதிவுசெய்ய பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. எனவே, மதிப் பெண் சான்றிதழ் பெற வரும் மாணவ-மாணவிகள், ரேஷன் அட்டை, 10-ம் வகுப்பு வேலை வாய்ப்பு பதிவு அட்டை ஆகிய வற்றை கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Category: கல்வி, மாநில செய்தி, மாவட்ட செய்தி
0 comments