கணிதம், இயற்பியல், வேதியியலில் 8,285 பேர் சதம்: பொறியியல் ‘கட் ஆப்’ மார்க் அதிகரிக்கும்!!
பிளஸ்-2 தேர்வில் கணிதம், இயற்பி யல், வேதியியல் பாடங்களில் 8,285 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ளனர். இதனால், இந்த ஆண்டு பொறியியல் கட் ஆப் மார்க் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் கணிதத்தில் 3,882 பேர், இயற்பியலில் 2,710 பேர், வேதியியலில் 1,693 பேர் என மூன்று பாடங்களிலும் சேர்த்து 8,285 பேர் 200-க்கு 200 மதிப்பெண் எடுத் துள்ளனர். (கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இயற்பியலில் கூடுதலாக 2,674 பேர் 200 மார்க் வாங்கியுள்ளனர்) எனவே, 8,285 பேருக்கும் முழு கட் ஆப் மார்க் வந்துவிடும். இவர்கள் தவிர, ஏராளமான மாணவர்கள் மூன்று பாடங்களில் 199, 198, 197, 196 என்ற அளவில் மதிப்பெண்கள் எடுத்திருக் கக்கூடும். கடந்த ஆண்டு மேற்கண்ட 3 பாடங்களிலும் 3,887 பேர் 200-க்கு 200 மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.
கட் ஆப் மார்க் அதிகரிக்கும்
பொறியியல் படிப்பில் சேருவதற் கான முக்கிய பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் 200-க்கு 200 பெற்ற வர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்திருப்பதால் இந்த ஆண்டு கட் ஆப் மார்க் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்து ஈரோட்டைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறியதாவது:
கணிதம், இயற்பியல், வேதியி யல் ஆகிய பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்களை பெற்றிருப்ப வர்களின் எண்ணிக்கை அதிகரித்தி ருப்பதால் 190 கட் ஆப் மார்க் வரை யில் 0.5 மதிப்பெண்ணும், 185 வரை 1 மதிப்பெண்ணும் அதிகரிக்கலாம். 180-க்கு கீழே 2 மார்க் உயரக்கூடும்.
எம்பிபிஎஸ் கட் ஆப் மாறுமா?
இயற்பியல், வேதியியல் பாடங் களில் 200-க்கு 200 அதிகரித்த போதி லும், உயிரியல் பாடங்களில் 200 மதிப்பெண் பெற்றவர்களின் எண் ணிக்கை குறைந்திருப்பதால் மருத் துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் ணில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு பேராசிரியர் மூர்த்தி செல்வகுமரன் கூறினார்.
பி.இ., பி.டெக். படிப்பை பொருத்த வரையில், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகளில் 2,285 இடங்க ளும், பல்கலைக்கழக மண்டல மைய கல்லூரிகளில் 5,340 இடங்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 6,310 இடங்களும் உள்ளன.
பொறியியல் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் முதலில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளையும், அதன்பின் அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளையும், கடைசி வாய்ப் பாக தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களையும் தேர்வு செய்வார்கள். அரசு மருத்துவ கல்லூரி களில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 2,172 இடங்களும், பிடிஎஸ். படிப்பில் 85 இடங்களும் இருக்கின்றன.
கட் ஆப் கணக்கிடுவது எப்படி?
மருத்துவம், பொறியியல் விவ சாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புக ளில் சேருவதற்கு கட் ஆப் மார்க் கணக்கிடப்படுகிறது. பொறியி யல் படிப்புக்கான கட் ஆப் மதிப் பெண்ணுக்கு இயற்பியல், வேதி யியல், கணிதம் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்ணும், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகள் என்றால், கணித பாடத்துக்குப் பதிலாக உயிரியல் அல்லது தாவர வியல்-விலங்கியல் மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மார்க் கணக்கிடும்போது, கணித மதிப்பெண் 100-க்கும், இயற் பியல், வேதியியல் மதிப்பெண் ஒவ்வொன்றும் 50-க்கும் மாற்றப்படும். அப்போது, 200-க்கு எத்தனை மார்க் என்று வரும். இதுவே கட் ஆப் மார்க் ஆகும். கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், “கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் முன்னணி கல்லூரிகளில் கட் ஆப் மார்க் 0.25 அதிகரிக்க வாய்ப்புள்ளது. அநேரத்தில், 3-வது, 4-வது நிலை கல்லூரிகளில் கட் ஆப் மார்க் குறையும். இந்த ஆண்டு பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் குறைந்திருப்பது போல் தெரிவதே இதற்கு காரணம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் பொறியியல் படிப்பில் 80 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கக் கூடும். மருத்துவ படிப்பை பொறுத்தமட்டில் கட் ஆப் 0.5, 0.7 என்ற அளவில் அதிகரிக்கலாம்” என்றார்
Category: கல்வி
0 comments