5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8,500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு!!
வரும் ஐந்தாண்டுகளில் தமிழகத் தின் மின்சார தேவையில் 8,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தென் மாநில மின்சார நிறுவனங்களுக்கு மத்திய மின்சார ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மாநிலங்களான தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுவை உள் ளிட்ட மாநிலங்களில், மொத்த மாக 21 ஆயிரம் மெகாவாட் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஆணையம் கணக்கிடப் பட்டுள்ளது.
மத்திய மின்சார ஆணையம், அனைத்து மாநிலங்களின் உத்தேச மின்சாரத் தேவை மற்றும் இருப்பு விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையின்படி, தென் மாநிலங்களில் வரும் ஐந்தாண்டு களில் 21 ஆயிரம் மெகாவாட் மின்சார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப் புள்ளது என்றும், இதில் தமிழகத்தில் அதிகபட்சமாக 8,522 மெகாவாட் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் என்றும் கண்டறிந்துள்ளது.
இதுகுறித்த விவரங்களை தமிழக மின்சார வாரியம் உள் ளிட்ட அனைத்து மாநில மின்சார நிறுவனங்களுக்கும் மத்திய மின்சார ஆணையம் முன்னெச் சரிக்கை அறிக்கை அனுப்பி யுள்ளது
தென் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுவை ஆகிய மாநிலங் களில், ஒவ்வொரு ஆண்டும், மொத்தமாக 6,688 மெகாவாட் முதல் படிப்படியாக உயர்ந்து ஐந்தாண்டுகளில் 21 ஆயிரம் மெகாவாட் வரை பற்றாக்குறை உயரும் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 2015-ம் ஆண்டில் 4,379 மெகாவாட்டும், 2016-ம் ஆண்டில் 4,137 மெகாவாட்டும், 2017-ம் ஆண்டில் 4,683 மெகாவாட்டும், 2018-ம் ஆண்டில் 5,932 மெகா வாட்டும், 2019-ம் ஆண்டில் 7,107 மெகாவாட்டும், 2020-ம் ஆண்டில் 8,522 மெகாவாட்டும் பற்றாக்குறை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு தமிழகத்தின் மின் தேவை 23 ஆயிரத்து 252 மெகாவாட்டாக உயரும் போது, 14,730 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி இருக் கும் என்று தற்போதைய திட்டங் களின் அடிப்படையில் தெரியவந் துள்ளது.
எனவே இதுகுறித்து உடனடியாக விவாதித்து எதிர்காலத்தில் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய மின்சார ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாநில மின்சார நிறுவனங்களிடம் மின் நிலையங்களின் உற்பத்தி, நடப்பு திட்டங்கள், தற்போதைய உற்பத்தி நிலவரம், எதிர்கால திட்டங்களின் நிலை குறித்து விரிவான விளக்கம் தர உத்தரவிட்டுள்ளது.
மேலும் எதிர்காலத்தில் ஒவ் வொரு மாநிலத்திலும் மின்சார தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த திட்ட முன்வரைவுகளை அளிக்கவும் அனைத்து மாநில மின் நிறுவனங்களுக்கும், மின்சார ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மின்சார ஆணைய ஆய்வில், கேரளாவுக்கு ஐந்தாண்டுகளில் 2,193 மெகாவாட்டும், கர்நாட காவில் ஐந்தாண்டுகளில் 3,099 மெகாவாட்டும், ஆந்திராவுக்கு ஐந்தாண்டுகளில் 7,639 மெகா வாட்டும், புதுவைக்கு 138 மெகா வாட்டும் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் தேவை, இருப்பு நிலவரம் (மெகாவாட்டில்)
ஆண்டு | தேவை | இருப்பு |
2015 2016 2017 2018 2019 2020 | 15723 17513 18705 20106 21618 23252 | 11344 13376 14022 14174 14511 14730 |
Category: மாநில செய்தி
0 comments