தென் மாவட்டங்களில் கன மழை வாய்ப்பு: 48 மணி நேரத்துக்கு நீடிக்கும்!!
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் மிக பலத்த மழை பெய்துள்ளது. வட மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஒரே நாளில் 30 செ.மீ. மழை பெய்துள்ளது. அதே மாவட்டத்தில் உள்ள மணிமுத் தாற்றில் 27 செ.மீ., அம்பையில் 23 செ.மீ., நாங்குநேரியில் 17 செ.மீ., சேரன்மாதேவியில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 11 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி, குழித்துறையில் 10 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, கன்னியாகுமரி மாவட் டம் நாகர்கோவில், பேச்சிப்பாறை, தக்கலை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பெய்துள்ளது.
இது தவிர புதுக்கோட்டை, திருப்பூர், கரூர், தூத்துக்குடி, நாமக்கல், நீலகிரி, தேனி, தஞ் சாவூர், திண்டுக்கல், கிருஷ்ண கிரி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், ஈரோடு, திருச்சி, திருவாரூர், மதுரை, திண்டுக்கல், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங் களில் மழை பெய்துள்ளது.
உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென் மேற்கு வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. கன்னியாகுமரி அருகே இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, புதன்கிழமை காலை, வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கேரளம் அருகே உள்ளது.
இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங் களில் பல இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்க ளிலும் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, கடல் கொந்தளிப்புடன் காணப்படும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையில் கடல் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை வீசும். தென் தமிழகம், லட்சத் தீவு கடற்கரையில் 55 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகம் வரை காற்று வீசும். எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவு, கேரள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கின்றனர்.
Category: உயர் கல்வி, மாநில செய்தி, மாவட்ட செய்தி
0 comments