அப்துல் கலாம் வளர்ப்பு மகள் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்!
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வளர்ப்பு மகள் என்று கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட பெண் பற்றி போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மயிலாப்பூரை சேர்ந்தவர் கலைவாணி. இவர் தன்னை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வளர்ப்பு மகள் என்றும், தன்னால் ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என கூறி சவுகார்பேட்டை பெருமாள் கோவில் தோட்டத்தைச் சேர்ந்த வினோத், பாலமுருகன் ஆகியோரிடம் ரூ.1½ லட்சம் வாங்கினார்.
பல மாதங்களாகியும் அவர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்தார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத், பாலமுருகன் ஆகியோர் இது பற்றி யானைக்கவுனி போலீசில் புகார் செய்தனர். போலீசார் கலைவாணியிடம் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

Category: மாநில செய்தி
0 comments