தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மீலாது மாநாட்டில் தீர்மானம்
சென்னை, ஜன.16:
சென்னை மாநகர மீலாது கமிட்டி சார்பில் மீலாது ஊர்வலம் மற்றும் மாநாடு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. பூக்கடை அருகே அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள மசூதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மண்ணடியை வந்து சேர்ந்தது. அங்கு மூர் தெருவில் போடப்பட்டிருந்த பந்தலில் மாநாடு தொடங்கியது.
மீலாது கமிட்டி தலை வர் மெர்தேகா ஏ.யூசுப் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அரபிக் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர், தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் தாஜூதீன், பொருளாளர் அப்துல் ரஹீம், அமைப் பாளர் பாபாஜான், துணை தலைவர் உஸ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியின் போது, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவோம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். வக்பு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Category: சமுதாய செய்தி
0 comments