.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபையில் புஷ்ரா நல அறக்கட்டளை 17ம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைப்பெற்றது!

Unknown | 4:24 AM | 0 comments

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

துபாய்.ஜனவரி 11.
நேற்று மாலை 07:30 மணிக்கு துபையில்  புஷ்ரா நல அறக்கட்டளையின் 17ம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பெற்பு விழா துபாய் தேரா வில் உள்ள அல் காமிஸ் உணவகத்தின் மாடியில் நடைப்பெற்றது.

இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.
இந்த நிகழ்ச்சி துவக்கமாக முஹம்மது அலி  கிராஅத் ஓதி துவக்கி வைத்தார் K.அப்துல் ஹக்கீம் தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினார். 

தனது தலைமையில் நடைப்பெற்ற  வளர்ச்சியும், 2014ல்  நமது நல அறக்கட்டளை  செய்ய வேண்டிய  பணியை பற்றி  பேசினார் . அதில் குறிப்பாக 3 மாதம் பிறகு லப்பைகுடிக்காடில் புஷ்ராவின் ஜீவல்லரி லோன் .மற்றும் R.D(நமக்கு நாமே) திட்டம் சிறுவியாபாரிகள் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.


மேலும் நிர்வாகிகள் மற்றும் உருப்பினர் எனது தலைமையில் சிறப்பாக ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றியை தெரிவித்து தனக்கு எவ்வாறு ஒத்துலைப்பு கொடுத்ததைவிட அதிகமான ஒத்துலைப்பு புதிய தலைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.மேலும் புதிய தலைவர் சிறப்பாக செயல் பட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தனது தலமையில் யார் மனதையோ புண்படும் படி பேசி இருந்தால் மன்னிக்கும் படி கேட்டுக்கொண்டார்.பின் 2013ம் ஆண்டறிக்கை வாசித்தார்.அதில் நமது ஊருக்கு திருமண உதவி,கல்வி உதவி,மருத்துவ  உதவி என 60,000 நலஉதவி செய்துள்ளதாக தெரிவித்து அதிகம் உருப்பினர்களை இனைத்து அனைவர்களும் பயன்பெருமாறு கேட்டு கொன்டார்.

பொது சொயளாலர் சேக்தாவுத் கூறும்போது வியாபாரத்திட்டத்தில் அடுத்த மாதம் முதல் ஒரு திட்டம் ஆரம்பிக்க இருப்பதாகவும். இத்திட்டத்திற்கும் பங்தாரர்கள் சேர விரும்பவர்கள் தங்களின் பெயர்களை பதிசெய்யுமாறு கேட்டு கொண்டார்.

திருச்சி ஜாகிர் அவர்கள் நமது அறக்கட்டளையில் அனைவர்களும் வைப்பு தொகையை கொடுத்து நமது ஊரில் அதிகம் லோன் கொடுத்து அனைத்து மக்களையும் வட்டியில் இருந்து காப்பாற்ற நாம் அனைவர்களும் பெரும் முயற்ச்சி செய்ய வேண்டும் என்று கேட்டு கொன்டார்.

நமது ஊரை சார்ந்த சர்புதீன் அவர்கள் கூறும் போது ஒரு அமைப்பு 16 வருடம் இப்படி கட்டு கோப்புடன் பொது சேவை செய்வது என்பது பெரும் கடினமான செயல் ஆனால் இந்த அமைப்பு அதற்கான தனி பானியை வைத்து கொண்டு அனைத்து உருப்பினர்களும் கடின உழைப்புடன் செயல் பட்டதன் காரனமாக இன்று 17ம் ஆண்டு துவக்க விழாவை நாம் கானுகின்றோம். இந்த அறக்கட்டளை இன்னும் பல நூற்றான்டு விழாக்களை கான இறைவனிடத்தில் பிறார்த்தனை செய்து வாழ்த்துகின்றேன் என்று கூறி தனது உறையை முடித்தார்.
பின் M.அப்துல்லா பாஷா அவர்கள் தலைமை பொறுப்பேற்று,சிறிது நேரம் பேசினார்.அதில் தம்மை தலைவராக தேர்ந்து எடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார்.மேலும் நமது நல அறக்கட்டளை சிறப்பாக செயல்பட தன்னால் முடிந்த வரை சிறப்பாக செயல் படுவதாக பேசினார்.பின் உறுப்பினர் இல்லாதவருக்கு கடன் கொடுக்கும் திட்டத்தில் இதுவரை 5 மாத தவணையில் திருப்பி கொடுக்க வேண்டும்.இனி அடுத்த மாதம் முதல் 8 தவணையில் திருப்பி செலுத்தலாம் என தெரிவிக்கப் பட்டது.
பின் 2014ம்  ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளின் பெயர் பட்டியலை S.நூர் முஹம்மது வாசித்தார்.
பிறகு சிறப்பு அழைப்பாளர்  "சென்னை பிலால் ஹஜ்ரத்"அவர்கள் பேசினார்கள்.அதில் குறிப்பாக வட்டியின் தீமை பற்றி மிக சிறப்பாக  பேசினார். வட்டி வாங்குபவர்களின் மறுமை நிலை எப்படி இருக்கும் என உறுப்பினர்களுக்கு சிறப்பாக விளக்கினார். மேலும் இன்று முஸ்லீம் மக்களிடம் வட்டி "கொடுக்கல்-வாங்கல்" மிக அதிகமாக காணப்படுவதாக வேதனையை தெரிவித்தார்.சமீபத்தில் வட்டியால் கொடுமையால் தற்கொலை தீக்குளிப்பு சம்பவம் அடிக்கடி தினசரி பத்திரிக்கையில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன என தெரிவித்தார்.எனவே இந்த புஷ்ரா நல அறக்கட்டளை லப்பைகுடிகாடு மட்டும் அல்லாமால் தமிழகம் முழுவதும் ஊருக்கு ஊர் தனது கிளைகளை விரிவு படுத்த அல்லாஹ்விடம் துஆ செய்வதாகவும்,இந்த நல அறக்கட்டளை கியாமத் நாள் வரை சிறப்பாக செயல் படவேண்டும் என தெரிவித்தார்கள்.
2013ம் ஆண்டு சிறப்பாக செயல் பட்ட K.அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு பொன்னடை போற்றி கவுரவிக்கப்பட்டது.

இம்மாதம் 15 நபர்கள் புதிய உருப்பினர்களாக சேர்ந்துள்ளனர்

பின் நிறைவாக S.நூர் முஹம்மது அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
பின் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.சாப்பிட்டப்பின் அனைவரும் கலைந்து சென்றனர்கள்.



 




































Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1