வீடுகளுக்கு மானிய விலையில் இனிமேல் 12 சிலிண்டர்!-மத்திய அரசு அறிவிப்பு!
புதுடெல்லி: வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும்படி ராகுல் காந்தி கேட்டுக் கொண்ட சில நிமிடத்தில், 12 சிலிண்டர்கள் வழங்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. வீடுகளுக்கு மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுவதில் மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன் கட்டுப்பாடு கொண்டு வந்தது. 2012, செப்டம்பர் முதல் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்பட்டன. பின்னர், 2013 ஜனவரியில் இது 9 ஆக உயர்த்தப்பட்டது. இதை மேலும் உயர்த்த வேண்டும் என்று காங்கிரஸ் மட்டுமின்றி, பல்வேறு எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. 5 மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 4 மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸ் அமைச்சர்கள் 2 வாரங்களுக்கு முன்னதாக மானிய சிலிண்டர் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மக்களவை தேர்தல் பற்றி விவாதிக்க டெல்லியில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் பிரசாரக்குழு தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டார். இதன் அடுத்த கட்டமாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, சலுகை விலை சிலிண்டர் எண்ணிக்கையை வருடத்துக்கு 12 ஆக உயர்த்தி அறி விப்பை வெளியிட்டார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு மொய்லி அளித்த பேட்டியில், ‘மானிய சிலிண்டர் எண்ணிக்கை உயர்த்துவது பற்றி மத்திய அரசு பார்த்துக் கொள்ளும்’ என்று கூறி இருந்தார். காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி பேசுகையில், ‘மானிய சிலிண்டர் எண்ணிக்கை வருடத்துக்கு 9ல் இருந்து தற்போது 12 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்காக, அரசு கூடுதலாக வருடத்திற்கு ஸி3,300 முதல் ஸி3,500 கோடி வரை செலவிட உள்ளது’ என்றார்.

Category: மாநில செய்தி
0 comments