பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் கலெக்டர் தகவல்!
பெரம்பலூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப்பட உள்ளது என பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது தெரித்தார்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டஅரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ சுப்பிரமணியன், மாவட்ட வேளாண் மைத்துறை இணைஇயக்குநர் அழகிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக் டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கனகசபை வரவேற்றார். கூட்டத்திற்கு கலெக்டர் தரேஸ்அஹமது தலைமை வகித்துப் பேசியதாவது :
பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனையாக தரம்உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மூளை நரம்பியல், இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட 17பிரிவுகள் புதிதாக துவங்கப்படும். இதற்காக ரூ.4கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்ணக்கோனம், ஆலம்பாடி, பேரளி ஆகிய 3இடங்களில் புதிதாக துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்ட அளவில் கால்நடைகளை தாக்கிவரும் கோமாரி நோய்க் கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நோய் தாக்கி இறந்த மாடுகளின் புள்ளி விபரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு உரிய நிவாணத் தொகை பெற்றுத்தப்படும். ஆலத்தூர் கேட்டிலிருந்து செட்டிக்குளம் பெரம்பலூர் வழியாக 7மீட்டர் அளவுள்ள சாலைகள் ரூ.7கோடியில் அமைத்திட டெண்டர் விடப்பட்டுள்ளது. வேப்பூர் ஏரியின் மதகுகளை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பூலாம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படும்.
சனி, ஞாயிறு என அரசு விடுமுறை நாட்களில் கூட அரசு ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். யார் வேண்டுமானாலும் குறைகளை சுட்டிக்காட்டலாம். முறையாகவும், நியாயமாகவும் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும். குத்துமதிப்பாக அரசு ஊழியர்கள் மோசம் என கூறக்கூடாது. ஒவ்வொரு விவசாய சங்கப் பிரநிதிகளின் பேச்சையும் கவனமாக கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
Thanks
Dinakaran
Category: மாவட்ட செய்தி
0 comments