மருந்தாளுனர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலை சரி பார்க்க வேண்டுகோள்!
பெரம்பலூர்,
மருந்தாளுனர் பணி யிடங்களுக்கு பதிவு மூப்பு பட்டியலின்படி பரிந்துரைகள் மேற் கொள்ளப்படவுள்ளன. தகுதியுடையோர் 12.12.2013க் குள் தங்கள் பெயர்கள் விடுபாடின்றி பரிந்துரைக்கப் பட்டுள்ள விபரத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தில் சரிபார்த்து கொள்ள வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
மருந்தாளுனர் பதவி
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள மருந்தா ளுனர் காலிப் பணி யிடங்க ளுக்கு, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கீழ்க்கண்ட விவரப்படி யான மாநில அளவிலான பதிவுமூப்புப் பட்டியலின்படி பரிந்துரைகள் மேற்கொள்ளப் படவுள்ளன.
பணிக் காலியிடத்தின் பெயர் மருந்தாளுனர் கல்வித் தகுதி பிளஸ்-2 தேர்ச்சி. மற்றும் மருந்தாளுநர் கவுன்சிலால் பதிவு செய்யப் பட்ட மருந்தாளுனர் பட்டயப் படிப்புத் தேர்ச்சி 3. வயது விவரம் : 01.07.2013 அன்று 18-57 வரை (அனைத்து வகுப் பினருக்கும்)
வயது வரம்பு
மேற்கண்ட தகுதியுடைய பதிவுதாரர்களில் முன் னுரிமைப் பிரிவில் பதிவு செய்துள்ள அனைத்து இன மனுதாரர்களும் நாளது தேதி வரையிலும், எஸ்.சி (அருந்த தியர்) முன்னுரிமையற்ற ஆண் மற்றும் பெண் இருபாலரும் 19.02.2003 வரையிலும், எஸ்.சி. முன்னுரிமையற்ற ஆண் மற்றும் பெண் இரு பாலரும் 04.10.1999 வரையி லும், எஸ்.டி முன்னுரிமையற்ற ஆண் மற்றும் பெண் இரு பாலரும் 10.03.2005 வரை யிலும், எம்.பி.சி. முன்னுரிமை யற்ற இனத்தில் ஆண்கள் 06.01.1994 வரையிலும், பெண் கள் 19.10.1995 வரையிலும், பி.சி.எம். முன்னுரிமையற்ற இனத்தில் ஆண்கள் 7.6.1991 வரையிலும், பெண்கள் 31.08.1994 வரையிலும், பி.சி. மற்றும் ஓ.சி. முன்னுரிமையற்ற இனத்தில் ஆண்கள் 16.12.1991 வரையிலும் பெண்கள் 30.06.1993 வரையிலும் தோராய பதிவு மூப்பாக பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
சரி பார்க்க வேண்டுகோள்
மேற்கண்ட தோராய பதிவு மூப்பிற்குட்பட்ட பெரம்பலூர் மாவட்ட பதிவுதாரர்களின் பெயர் விவரங்கள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பரப் பலகை யில் ஒட்டப் பட்டுள்ளன. எனவே மேற்கண்ட பதிவு மூப்புக்குள் உள்ள பெரம்பலூர் மாவட்ட பதிவுதாரர்கள் அனைவரும் தங்கள் பெயர்கள் விடுபாடின்றி பரிந்துரை செய்யப் பட்டுள்ளதை 12.12.2013க்குள் சரி பார்த்து உறுதி செய்து கொள்ள வேண் டும்.
மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Category:



0 comments